இலங்கை செய்தி

ஐரோப்பாவில்போன்று இலங்கையில் மக்கள் புரட்சி வெடிக்குமா?

“ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று இலங்கையிலும் மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படாது. நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம்” எனப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

“ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று இலங்கையிலும் மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படாது. நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம்” எனப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளை அவதானித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே தற்போது உரையாற்றுகின்றேன். மேற்காசியப் போரினால் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் உலகளாவிய ரீதியில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, போரில் நேரடியாகப் பங்கேற்ற நாடுகளில் அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

வல்லரசு நாடுகளில்கூட இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சிறிய நாடான இலங்கை, நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்து வருகின்றது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணிக் கையிருப்பும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளும் நாட்டுக்கு வருகின்றன. வெளிநாட்டு முதலீடுகள் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வருவதில்லை. மாறாக, உலகளாவிய தரநிர்ணயங்களைக் கருத்திற்கொண்டே முதலீட்டாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்து வருகின்றன. சர்வதேச தரநிர்ணயங்களிலும் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

ஈரான் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம்கூடப் பாதிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், அந்நாடுகளின் கடன் சுமையும் உயர்ந்துள்ளது.

எனவே, ஐரோப்பாவில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று இலங்கையிலும் மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படாது. நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச தரநிர்ணயங்களிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம்” என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை