தைவானை சுற்றி ரோந்து செல்லும் சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரிப்பு
தைவானை சுற்றி சீன கடலோரக் காவல் படையின் நடமாட்டம் மற்றும் ரோந்து நடவடிக்கைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக தைவான் கடலோரக் காவல்படையின் தரவுகள் தெரிவித்துள்ளன.
சீனாவின் இந்த நடவடிக்கையானது பசுபிக் கடலில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே மாதத்தில் சுமார் 30 கப்பல்கள் பயணித்திருந்த நிலையில் தற்போது 55 கப்பல்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் நடமாட்டங்கள் மே மாதத்தை விட ஜுன் மாதத்தில் 83 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானுக்கு எதிரான பெய்ஜிங்கின் சமீபத்திய அழுத்தப் பிரச்சாரத்தில் சீனாவின் கடலோரக் காவல்படையின் வளர்ந்து வரும் பங்கை இந்தப் புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இது தைவானைக் கோபப்படுத்துவதோடு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.





