இலங்கை

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Sri Lanka Petroleum Corporation announces new fuel prices

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையல் எரிபொருள் விலைகளில் திருத்தத்தை அறிவித்துள்ளது.

இதற்கமைய ஆட்டோ டீசல்’ (Auto Diesel) விலை லிட்டருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாகவும், ‘சூப்பர் டீசல்’ (Super Diesel) விலை லிட்டருக்கு 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ‘பெட்ரோல் 92 ஒக்டேன்’ (Petrol 92 Octane) விலை லிட்டருக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாகியுள்ளது.

ஆனால் ‘பெட்ரோல் 95 ஒக்டேன்’ (Petrol 95 Octane) விலையில் எந்த மாற்றமும் இன்றி  475 ரூபாவாகவே தொடர்கிறது.

மேலும், மண்ணெண்ணெய் விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; அதன் விலை 285 ரூபாவாகவே காணப்படுகிறது.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

ஆட்டோ டீசல் – 392 ரூபா (10 ரூபா அதிகரிப்பு)
சூப்பர் டீசல் – 528 ரூபா (50 ரூபா அதிகரிப்பு)
பெட்ரோல் 92 ஒக்டேன் – 414 ரூபா (15 ரூபா அதிகரிப்பு)
பெட்ரோல் 95 ஒக்டேன் – மாற்றம் இல்லை
மண்ணெண்ணெய் – மாற்றம் இல்லை

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்