உலகம்

மற்றுமோர் கப்பலை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா : 05 பேர் உயிரிழப்பு!

  • January 1, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட இரண்டு கப்பல்கள் மீது கடந்த 31 ஆம் திகதி தாக்குதல் நடத்தியதாக  அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தாக்குதல் எங்கு முன்னெடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்கப் படைகள் கடந்த மூன்று மாதங்களாக கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடற்பகுதிகளில் இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த தாக்கதல்கள் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிரானது எனக் கூறப்பட்டாலும், சமூக ஆர்வலர்கள் அமெரிக்காவின் மேற்படி நடவடிக்கையை […]

அரசியல் இலங்கை செய்தி

மகனுக்காக பதவி துறந்த அப்பா! சஜித் அணிக்குள் நடப்பது என்ன?

  • January 1, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் நடந்த அரசியல் சமரில் ஆளுங்கட்சி (NPP) வெற்றிபெற்றுள்ள நிலையில், பின்னடைவை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்திக்குள் (SJP) உள்ளக மோதல் வெடித்துள்ளது. இதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி சி.வை.பி. ராம் C.Y.P. Raam கட்சியில் வகித்த அனைத்து பதவிகளையும் துறந்துள்ளார். கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டபோது மேலதிக மூன்று வாக்குகளால் அது […]

இலங்கை செய்தி

பணமில்லா பயணம் – SLTB பேருந்துகளில் மின்னணு அட்டை கட்டணம்

  • January 1, 2026
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துகளுக்கான புதிய மின்னணு அட்டை கட்டண முறையை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம் இன்று (01) அறிமுகப்படுத்தியது. இது அரசாங்கத்தின் டிஜிட்டல் தீர்வுகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ண தலைமையில் புறக்கோட்டையில் உள்ள மகும்புர மல்டிமோடல் மையத்தில் (MMC) இந்த நிகழ்வு நடைபெற்றது. புதிய முறையின் மூலம், பயணிகள் கூடுதல் கட்டணங்கள் இன்றி […]

ஐரோப்பா

கடுமையான சட்டங்களுக்கு மத்தியிலும் பிரித்தானியாவிற்கு படையெடுக்கும் புலம்பெயர்வோர்!

  • January 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 2025 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை  41,472  ஆக உயர்ந்துள்ளது. இது தொழிற்கட்சி அரசாங்கத்தின் பலவீனமான யுக்திகளை புலப்படுத்துவதாக நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளபோதிலும்  2024 ஆம் ஆண்டை விட இந்த வருடத்தில் 13 சதவீதம் அதிகரித்திருப்பதை புதிய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 41 சதவீத அதிகரிப்பை குறிக்கிறது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிட்டத்தட்ட 65,000 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். இதற்கிடையே உள்துறை […]

இலங்கை செய்தி

கொம்பனித்தெருவில் அதிரடி சோதனை -150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

  • January 1, 2026
  • 0 Comments

கொம்பனித்தெருவில் நடத்தப்பட்ட சோதனையின் போது,150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ​​ஹெரோயின், கொகைன் மற்றும் மெத்தம்பேட்டமைன் (ICE) உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மெத்தம்பேட்டமைன் (ICE) வைத்திருந்த  சந்தேக நபர் ஒருவரை முதலில் கைது செய்ததாகவும், அவர் வழங்கிய தகவலின் பேரில் மற்றவர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக […]

இலங்கை செய்தி

பேரிடர் நிவாரணத்துடன் கல்வி அமைச்சின் 2026 புத்தாண்டு ஆரம்பம்

  • January 1, 2026
  • 0 Comments

2026ஆம் ஆண்டின் புத்தாண்டை கல்வி அமைச்சு, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் மனிதாபிமான நடவடிக்கையுடன் ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமைச்சின் ஊழியர்கள் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினர். புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில், கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று (01) விசேட நிகழ்வொன்று நடைபெற்றது. இதன்போது, பேரிடரால் உயிரிழந்தவர்கள் மற்றும் மீட்பு பணிகளில் உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. […]

அரசியல் இலங்கை செய்தி

“புத்தாண்டில் புதிய அமைச்சை கோருகிறார் சஜித்”

  • January 1, 2026
  • 0 Comments

“இவ்வருடத்திலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (01) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு நடந்த துயர் மிகு நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்திய இளைஞர் – குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

  • January 1, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பெர்த் (Perth) அருகே  இன்று காட்டுத்தீயை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லூக் ஜோசப் க்ர்குரிக் (Luke Joseph Grguric) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் செயலை  பொறுப்பற்றது என வழக்குறைஞர்கள் விமர்சித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். காய்ந்த புல்லில் பட்டாசு கொழுத்தியதன் மூலம் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்  அப்பகுதியில் இருந்த வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய […]

இலங்கை செய்தி

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு – டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு கேள்விக்குறி

  • January 1, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பெற்றுள்ள சைபர் முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில்  12,650 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவது சைபர் சம்பவங்களின் முக்கிய காரணமாக மாறியுள்ளதாக இலங்கை CERT தெரிவித்துள்ளது. போலி கணக்குகள், சமூக ஊடக கணக்கு கையகப்படுத்துதல் மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகள் அதிகமாக முறைப்பாடளிக்கப்படும் பிரச்சினைகளாக உள்ளன. ஒன்லைன் துன்புறுத்தல், தவறான உள்ளடக்கம் […]

இலங்கை செய்தி

மீள்குடியேற்ற ஏற்பாடு குறித்து கேட்டறிந்தார் அநுர!

  • January 1, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல் சென்று மக்களிடம் நலன் விசாரித்தார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, அங்கும்புர, கன்கொட்டுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 06 வீடுகள் முழுமையாகவும், 15 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பகுதியில் 30 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி ஸ்ரீ சுதர்ஷனாராமய […]