அமெரிக்காவின் அடுத்த இலக்காக மாறும் கிரீன்லாந்து : அவசரமாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
வெனிசுலாவை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள நிலையில், கீரீன்லாந்தை கைப்பற்றக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த டென்மார்க் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் ஒன்றை இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை […]













