உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் மூடப்பட்ட மாஸ்கோ விமான நிலையங்கள்
Moscow airports closed due to Ukraine drone strikes
ரஷ்ய(Russia) தலைநகரில் உக்ரைன் பல ட்ரோன்களை ஏவியதை அடுத்து, மாஸ்கோவில்(Moscow) மூன்று விமான நிலையங்கள் விமானப் போக்குவரத்திற்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் மாஸ்கோவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான வுனுகோவோ(Vnukovo) உட்பட பல விமான தாமதங்களுக்கு வழிவகுத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுப்பாடுகள் அவசியம்” என்று ரஷ்ய விமான ஒழுங்குமுறை ஆணையமான ரோசாவியாட்சியாவின்(Rosaviatsia) செய்தித் தொடர்பாளர் ஆர்டெம் கொரென்யாகோ(Artem Korenyako) குறிப்பிட்டுள்ளார்.
தலைநகரை நோக்கிச் சென்ற குறைந்தது 27 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு சுட்டுவீழ்த்தியது என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின்(Sergei Sobyanin) தெரிவித்துள்ளார்.





