உலகம் செய்தி

நைஜீரியாவில் 31.5 கிலோ கோகைனுடன் 22 இந்திய கப்பல் பணியாளர்கள் கைது

22 Indian ship crew members arrested with 31.5 kg of cocaine in Nigeria

நைஜீரியாவின்(Nigeria) லாகோஸின்(Lagos) பிரதான துறைமுகத்தில் ஒரு வணிகக் கப்பலில் 31.5 கிலோகிராம் கோகைன்(cocaine) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதன் 22 இந்திய(India) பணியாளர்களை கைது செய்ததாக போதைப்பொருள் அமலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ஷல்(Marshall ) தீவுகளில் இருந்து வந்த எம்.வி. அருணா ஹுல்யா(MV Aruna Hulya) கப்பலில் இந்த பெருந்தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க அமைப்பின்(NDLEA) செய்தித் தொடர்பாளர் ஃபெமி பாபாஃபெமி(Femi Babafemi) ஒரு அறிக்கையில் இந்த பறிமுதலை உறுதிப்படுத்தினார்.

ஐரோப்பா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி மையமாக நைஜீரியா நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலில்(Brazil) இருந்து லாகோஸ் துறைமுகத்திற்கு 20 கிலோகிராம் கோகோயின் கொண்டு சென்ற 20 பிலிப்பைன்ஸ்(Philippines) மாலுமிகளை கைது செய்யப்பட்டனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி