கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்ட எம்.ஏ. சுமந்திரன்!
திருகோணமலை- கன்னியா வெந்நீர் ஊற்றப் பகுதிக்கு (04) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமானங்கள் மற்றும் சிலையினையும் பார்வையிட்டார். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சுமந்திரனின் இந்த விஜயம் வந்துள்ளது. இதன்போது பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலரும் தர்மகர்த்தாவுமாகிய கோகிலரமணியுடனும் கலந்துரையாடலிலும் சுமந்திரன் ஈடுபட்டார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற […]













