செய்தி தமிழ்நாடு

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

  • January 14, 2026
  • 0 Comments

தமிழக அரசின் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான ‘பேரறிஞர் அண்ணா விருது’ அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்புவுக்கு ‘திரு.வி.க விருது’, வழக்கறிஞர் அருள்மொழிக்கு ‘பெரியார் விருது’, மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வனுக்கு ‘அம்பேத்கர் விருது’ வழங்கப்படவுள்ளது. கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் முறையே பாரதியார் மற்றும் பாரதிதாசன் விருதுகளுக்குத் […]

செய்தி

4 வருடங்களுக்கு பிறகு முதலிடத்துக்கு முன்னேறிய Virat Kohli

  • January 14, 2026
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC ஒருநாள் ODI போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி Virat Kohli முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் ODI , டி20 T- 20, டெஸ்ட் Test தொடருக்கான தரவரிசைப் பட்டியலை வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடுகின்றது. இதற்கமைய இவ்வாரத்துக்குரிய ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ODI போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி, 4 ஆண்டுகளுக்கு முதலிடம் பிடித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து தொடருக்கான முதல் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கடல் காற்றாலை மின்சாரத் திட்டங்களுக்குப் பாரிய ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு

  • January 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளை அடையும் நோக்கில், சாதனை அளவாக 8.4 ஜிகாவாட் (GW) கடல் காற்றாலை மின்சாரத் திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 12 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்கொட்லாந்தின் பெர்விக் பேங்க் (Berwick Bank) மற்றும் யோர்க்ஷயரின் டோகர் பேங்க் (Dogger Bank) உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கை பிரித்தானியாவின் எரிசக்தி இறையாண்மையை உறுதிப்படுத்தும் என எரிசக்தி செயலாளர் […]

பொழுதுபோக்கு

விஜய்யின் வெற்றிக்காக ரவி மோகன் தவம்!

  • January 14, 2026
  • 0 Comments

“தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜய்யின் Vijay வெற்றிக்காக பிரார்த்தனை செய்கின்றேன்.” – என்று நடிகர் ரவி மோகன் Ravi Mohan தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி Modi பங்கேற்ற பொங்கல் விழா டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. பொங்கல் விழாவில் பராசக்தி திரைப்படக் குழவினரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர் நடிகர் ரவி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் […]

இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பௌத்த பிக்கு உட்பட 08 பேருக்கு விளக்கமறியல்!

  • January 14, 2026
  • 0 Comments

திருகோணமலை-பிரதான கடற்கரையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திய சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு பௌத்த பிக்குகளான திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் உட்பட  […]

உலகம்

ஈரான் போராட்டம் – பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக வாக்குமூலம் பதிவு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் ஆர்ப்பாட்டம் தொடங்கியதில் இருந்து அரசு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 97 வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெறப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கா அல்லது இஸ்ரேலை குற்றம் சாட்டும் வகையில் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கும் வகையில் திரிபுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில்  பொருளாதார சரிவு காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அரச அலுவலகங்களுக்குத் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்

  • January 14, 2026
  • 0 Comments

இலங்கையில் அரச அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இன்று காலை பதுளை மாவட்டத் தொழில் காரியாலயத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உதவித் தொழில் ஆணையாளர் வழங்கிய தகவலின்படி, பொலிஸார் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் கண்டி மாவட்டச் செயலகம் மற்றும் நாவலபிட்டி பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் இதே […]

உலகம் செய்தி

உகண்டாவில் தேர்தல் பதற்றம்: நாடு தழுவிய ரீதியில் இணையச் சேவைகள் முடக்கம்

  • January 14, 2026
  • 0 Comments

உகண்டாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி சேவைகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி யோவேரி முசவேனிக்கு (Yoweri Museveni) எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எட்டாவது முறையாகப் போட்டியிடும் 81 வயதான முசவேனியின் நீண்டகால ஆட்சிக்கு எதிராக இளைஞர்களும் எதிர்க்கட்சியினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவே இணையம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும், போராட்டங்களை ஒடுக்கவே இந்த […]

செய்தி

உக்ரைனுக்கான ஆயுத கொள்வனவு : ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்துள்ள முரண்பாடு!

  • January 14, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் €90 பில்லியன் கடனில் அமெரிக்காவிடம் இருந்து உக்ரைன் ஆயுதங்களை கொள்வனவு செய்வதை பிரான்ஸ் எதிர்த்துள்ளது. ஆயுதங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியை ஐரோப்பிய பாதுகாப்புத் துறையில் மட்டுமே செலவிட வேண்டும் என்று பிரான்ஸ் விரும்புகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பு சுதந்திரத்தை ஊக்குவிக்கவும், ஐரோப்பாவின் ஆயுத உற்பத்தியாளர்களை வலுப்படுத்தவும் நீண்டகாலமாக கோரி வருகிறார். இந்நிலையிலேயே மக்ரோன் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதை எதிர்த்து வருகிறார். […]

இலங்கை செய்தி

வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை!

  • January 14, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிடம் இலங்கை அரசாங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் Matthew Duckworth யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை ramalingam chandrasekar சந்தித்து, அரசியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி சார்ந்த முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே  ஆஸ்திரேலிய தூதுவரிடம், அமைச்சர் சந்திரசேகர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான […]