காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது மற்றும் தணிக்கும் போது மேற்படி திணைக்களத்தின் முன்னறிவிப்பு இன்றியமையாதது, எனவே உலக வங்கியின் நிதியுதவியுடன் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி போன்ற நிறுவனங்களை நவீனமயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தில் இன்று (மார்ச் 23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு […]













