இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – கிரிக்கெட் மட்டையால் தாக்கி தந்தையை கொன்ற மகன்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் மகனின் கிரிக்கெட்  மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டைப் பதிவு செய்த அவர் தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியேறி கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.

18ம் திகதி குறித்த விடுதியிலிருந்து வெளியேறிய அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 21ம் திகதி குறித்த நபர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சகிதம் மரணமானவரின் வீடு மற்றும் தங்கியிருந்த தனியார் விடுதி போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தையும் பார்வையிட்டு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இன்று  அவரது பிரேத பரிசோதனை இடம்பெறுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.அப்துர் றஹீம் தெரிவித்தார்.

பலியானவர் 65 வயதுடைய கடுசப்பிள்ளை கருணாகரன் என்ற ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content