இலங்கை செய்தி

பேருவளையில் அரசியல்வாதியின் மனைவி மீது சரமாரியாக கத்திக்குத்து

  • April 12, 2023
  • 0 Comments

பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 அங்குல நீளமான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை […]

இலங்கை செய்தி

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை

  • April 12, 2023
  • 0 Comments

இன்று (07) பிற்பகல் அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த  ரயிலில் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ, ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குருகே நீல் பெரேரா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ தல்பிட்டிய ரத்நாயக்க வீதியில் புகையிரத கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாதுவ நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்திர குமாரவின் பணிப்புரைக்கமைய பல்வேறு முறைப்பாடு திணைக்கள அதிகாரிகள் […]

இலங்கை செய்தி

கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியர்

  • April 12, 2023
  • 0 Comments

பேராதனை, இலுக்வத்தை பகுதியில் இன்று (07) காலை இருபத்தைந்து வயதுடைய முன்பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். முருதலாவ பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா (25) என்ற யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கினிஹேன மயானத்திற்கு அருகில் இன்று காலை முன்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது யாரோ அவரது கழுத்தை அறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்பள்ளி ஆசிரியை வீட்டில் இருந்து வரும்போது […]

இலங்கை செய்தி

பேராதனையில் உயிரிழ்ந்த கர்ப்பிணி தாய்

  • April 12, 2023
  • 0 Comments

அறுவைசிகிச்சைக்குப் பிறகு 26 வயது கர்ப்பிணி தாய் உயிரை இழந்துள்ளார். இந்த சம்பவம் பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (06) இடம்பெற்றது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பெண் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். கண்டி கன்னோருவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். பிரசவித்த குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன […]

இலங்கை செய்தி

அடுத்த ஆண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒன்றறை இலட்சத்திற்கு நிலைப்படுத்த திட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒன்றறை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்திட்ட நடவடிக்கைகளை சர்வதேச நிதி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலத்திற்குள் பொருளாதார வளர்ச்சி முன்னெற்றமடையும். சகலருக்கும் நிவாரணம் வழங்கும் […]

இலங்கை செய்தி

திருகோணமலையின் முக்கிய பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி!

  • April 12, 2023
  • 0 Comments

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையின் இன்னுமொரு பகுதியில் இன்று பௌத்த துறவிகள் விசேட பூஜைகளை செய்துள்ளதாக மூதூர் இந்து மத குருமார் சங்கத் தலைவர் பாஸ்கர சர்மா தெரிவித்துள்ளார். 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைக்கப்பட்ட நிலையில்,  அங்கு அம்பாள் வழிபாடுகள் நடைபெற்றதற்கான எச்சங்கள் இனங்காணப்பட்டது. இதனையடுத்து, குறித்த பகுதியை இந்துக்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை சுத்தம் […]

செய்தி

தடம்புரண்ட உதயதேவி ;16 பேர் படுகாயம்

  • April 12, 2023
  • 0 Comments

கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி ரயில், கந்தளாய் – அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

2019 இல் நியூசிலாந்து நோக்கி பயணித்த 248 பேருக்கு என்ன நேர்ந்தது : வெளியாகிய புதிய தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

2019 இல் நியுசிலாந்திற்கு ஆபத்தான  கடல் பயணத்தை மேற்கொண்ட 248 இலங்கையர்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி குறித்த 248 பேரும் காணாமல்போயிருக்கலாம் என  நியுசிலாந்தின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2019  ஜனவரி 12ம் திகதி ஆட்கள் பயணிக்கும் படகாக மாற்றப்பட்ட 27 மீற்றர் மீன்பிடிப்படகு இந்தியாவிலிருந்து 248 தமிழர்களுடன் புறப்பட்டது. அந்த படகு அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்தை சென்றடைய முயற்சி செய்திருக்கலாம் என நியுசிலாந்து அரச ஆவணங்கள் தெரிவித்துள்ளன.. அதன்பின்னர் அந்த படகிலிருந்தவர்கள் குறித்து […]

இலங்கை செய்தி

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள 23 கப்பல்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் 23 கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியுடன்  குறித்த 23 கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக அனல்மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் கூறுகிறார். மேலும் தற்போது சுமார் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் சர்வதேச தரங்களுக்கு அமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதையும் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டு […]