பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா ராயின் நடிப்பு குறித்து மனம் திறந்து உண்மையை கூறிய அபிஷேக் பச்சன்!

  • May 28, 2023
  • 0 Comments

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஐஸ்வர்யா ராய் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது மறுபிரவேசத்தில் அடியெடுத்து வைத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது மற்றும் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதில் ஐஸ்வர்யா ராய் தனது நடிப்பு திறமைக்காக பலரால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனிடமிருந்து ஏராளமான பாராட்டுக்களையும் ஆதரவையும் அவர் பெற்றார். சமூக […]

உலகம்

பசிபிக் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனங்கள்

  • May 28, 2023
  • 0 Comments

மெக்ஸிகோ மற்றும் ஹவாய் பகுதிகளுக்கிடையே அமைந்துள்ள பசிபிக் பெருங்கடலில் ஒரு பெரிய பகுதியானது கனிய வளங்களை கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது. கிளாரியன் கிளிப்பர்டன் என அறியப்படும் குறித்த பகுதியை ஆராய்ந்து அங்கு நடைபறும் பல்லுயிர்ப் பெருக்கத்தை விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர். “கம்மி அணில்” என அழைக்கப்படும் அந்த வகையில் சைக்ரோபோட்ஸ் வாக்கிகாடா என்ற நீண்ட வால் மற்றும் ஒரு வகையான ஜெலி இனிப்பை ஒத்திருக்கும் உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது.இந்த இனமானது ஆம்பெரிமா என அழைக்கப்பட்டாலும் ஆய்வின் போது பல உயிரினங்கள் […]

இலங்கை

இலங்கையின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • May 28, 2023
  • 0 Comments

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (28)  வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறான அதிக வெப்பமான காலநிலை காணப்படும். வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் ‘கவனம்’ என்று அழைக்கும் மட்டத்தில் இருக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இலங்கை

நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவ தீர்மானம்!

  • May 28, 2023
  • 0 Comments

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்காக நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தேவையான தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் வாக்களிப்பதைக் கண்காணிக்க முடியும்.  அதே நேரத்தில் வாக்காளர் செல்வாக்கு இல்லாமல் வாக்களிக்க முடியும் என்று […]

இலங்கை

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

  • May 28, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலகம்

ChatGPT ஆல் அமெரிக்க சட்டத்தரணிக்கு ஏற்பட்ட சோதனை

  • May 28, 2023
  • 0 Comments

நியூயார்க் வழக்கறிஞர் ஒருவர் தனது சட்ட ஆராய்ச்சிற்கு AI கருவியான ChatGPT ஐப்  பயன்படுத்தியமையால், நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். நபர் ஒருவர் விமானம் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கை முன்கொண்டு நடத்துவதற்காக சில முன்னோடி வழக்குகளை உதாரணமாக முன்வைப்பதற்கு வழக்கறிஞர் ChatGPT ஐப் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவ்வாறாக குறிப்பிடப்பட்ட முன்னோடி வழக்குகளை  தங்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என விமான நிறுவனம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதனையடுத்து முன்னோடி வழக்குகள் குறித்து விவரிக்க […]

இந்தியா

டெல்லியில் அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு!

  • May 28, 2023
  • 0 Comments

டெல்லியில் புதிய பாராளுமன்ற திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பாராளுமன்ற கட்டிட கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்ததுடன்  மக்களவையில் செங்கோலை நிறுவினார். பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கக்கூடாது,  சாவர்க்கரின் பிறந்தநாளில் திறப்பது சரியல்ல. என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும் திட்டமிட்டபடி திறப்பு விழா நடக்கிறது. இது ஒருபுறமிருக்க  போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து […]

பொழுதுபோக்கு

புதிய பாராளுமன்றத்தை அழகிய வீடு என்றார் ஷாருக்கான்!! மோடி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

  • May 28, 2023
  • 0 Comments

இந்தியாவில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தொகுதி இன்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடத்தை திறந்ததும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை, பூஜை செய்து ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர். அந்த செங்கோலை கையில் ஏந்தியபடி நடந்து சென்ற பிரதமர் மோடி, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் அதனை நிறுவினார். இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்டார். அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து பிரபலங்கள் பலரும் பேசி உள்ளனர். அந்த வகையில் பாலிவுட் […]

தமிழ்நாடு

இறந்த குழந்தையின் உடலை 10km தூக்கி சென்ற பெற்றோர்!

  • May 28, 2023
  • 0 Comments

தமிழகத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை 10km, பெற்றோர் கண்ணீரோடு தூக்கி சென்ற சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட, அத்திமரத்து கொல்லை கிராமத்தில், விஜி- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது ஒன்றரை வயது குழந்தையான தனுஷ்காவை, உறங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். அவர்கள் ஊரிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதை […]

இலங்கை

சாதாரண தர பரீட்சையை எதிர்நோக்கியுள்ள 6 மாணவர்கள் கைது!

  • May 28, 2023
  • 0 Comments

கேகாலை,  அரநாயக்கவில் அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நீர்த்திட்டம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த நீர் குழாய் தீப்பிடித்து எரிந்திருந்தது. இந்த தீ விபத்து நாசகார செயல் என தெரிவிக்கப்பட்டதையடுத்து அரநாயக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்படிஇ நீர் குழாயில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் […]