உலகம்

நிபா வைரஸ் ஆபத்து குறைவாக உள்ளது – WHO அறிவிப்பு!

  • January 30, 2026
  • 0 Comments

இந்தியாவில்  நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மனிதனுக்கு மனிதன் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நிறுவனம் கூறியது.  மேலும் பயண அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது. நிபா என்பது வௌவால்களால் பரவும் ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும், இது 40-75 சதவீதம் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது, மேலும் தற்போது உரிமம் பெற்ற தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. […]

இலங்கை செய்தி

கொழும்பில் 60% பஸ் சாரதிகள் போதைப்பொருள் அடிமைகள் – அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

  • January 30, 2026
  • 0 Comments

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் -ஆயிரக்கணக்கானோர் அணிதிரளவேண்டும் என ரவிகரன் எம்.பி அழைப்பு

  • January 30, 2026
  • 0 Comments

மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் ‘கிவுல் ஓயா’ திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 02ஆம் திகதி ஆயிரக்கணக்கில் மக்கள் தன்னெழுச்சியாக அணி திரளவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “தமிழர்களுடைய பூர்வீக […]

இலங்கை செய்தி

யாழ் மாவட்டத்தை வந்தடைந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்

  • January 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பலாலி விமான நிலையம் ஊடாக அவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இதன்போது அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது.

இலங்கை செய்தி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனும் போர்வையில் பாரிய மோசடி- உடனடியாக முறைப்பாடளிக்குமாறு அறிவுறுத்தல்

  • January 30, 2026
  • 0 Comments

“துபாய் சுத்தா” என்ற பெயரில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மனித கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. சந்தேக நபர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, இலங்கையில் வேலை தேடுபவர்களுக்கு மால்டோவாவில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக விளம்பரம் செய்து பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த விளம்பரங்களுக்கு பதிலளித்த பலர் பணம் செலுத்திய பின்னர் ஏமாற்றப்பட்டதாக பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளனர். இந்த மோசடி குறித்து […]

ஐரோப்பா

முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக வந்த ஈரான் – கவலையில் ஜெலென்ஸ்கி!

  • January 30, 2026
  • 0 Comments

அமெரிக்கா தற்போது ஈரான் மீது கவனம் செலுத்தி வருவதால், உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Zelenskyy) இன்று  கூறியுள்ளார். இந்த வார இறுதியில் உக்ரைன்,  அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் தனது முத்தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர திட்டமிட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா ஈரான் மீது கவனம் செலுத்துவதால் இந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ரொய்டர்ஸ் செய்திக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் ஒப்புக்கொண்ட அனைவரும் கூட்டத்தில் […]

ஐரோப்பா

ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணைய நியூசிலாந்து மறுப்பு!

  • January 30, 2026
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் அமைதி வாரியத்தில் சேருவதற்கான அழைப்பை நியூசிலாந்து நிராகரித்துள்ளது. காசா அமைதி வாரிய திட்டம் தொடர்பில் தெளிவான விளக்கங்கள் இல்லை என்றும், கூடுதல் தகவல்கள் தேவை என்றும் அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) கூறியுள்ளார். அத்துடன் காசாவிற்கான ஐ.நா. சாசனத்திற்கு இணக்கமானதாக வாரியத்தின் பணி இருக்க வேண்டியதன் அவசியத்தை வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ்  (Winston Peters) வலியுறுத்தியுள்ளார். துருக்கி, எகிப்து மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல மத்திய கிழக்கு மற்றும் […]

உலகம்

வளைகுடா நாடுகள் நோக்கி பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் – ஈரானுக்கு 02 நிபந்தனை!

  • January 30, 2026
  • 0 Comments

வளைகுடா நாட்டில் அதிகரித்து வரும் பதற்றங்களை தவிர்க்க ஈரான் இரண்டு விடயங்களை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். “முதலாவது, அணு ஆயுதம் வேண்டாம். இரண்டாவது, எதிர்ப்பாளர்களைக் கொல்வதை நிறுத்துங்கள்,” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். “எங்களிடம் இப்போது ஈரானுக்குப் பயணிக்கும் மிகப் பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் ஏராளமாக உள்ளன, அவற்றை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை என்றால் நன்றாக இருக்கும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அணு ஆயுதத் திட்டத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா […]

இலங்கை செய்தி

டித்வா புயல்: சர்வதேச கொடையாளர் மாநாடு இழுபறியில்!

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்ட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026 ஜனவரி மாதம் குறித்த மாநாடு நடத்தப்படும் என 2025 இறுதியில் அரச தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதமானது மீள் கட்டமைப்பு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புக்கு மேலதிகமாக 500 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. […]

இலங்கை

ஏறிய வேகத்தில் திடீரென குறைந்த தங்கத்தின் விலை!

  • January 30, 2026
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை  20,000 குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (30) காலை  கொழும்பு  தங்க சந்தை நிலவரங்களின்படி,    “22 காரட்” தங்கத்தின் விலை  368,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று (29)  386,400 ரூபாயாக  பதிவாகியிருந்தது. இதற்கிடையில், நேற்று  420,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று  400,000 ரூபாயாகக்  குறைந்துள்ளது.