யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மைத்திரி
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று (01) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். மைத்திரிபால சிறிசேன அவர்களை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட அவர் நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார். சுகாதார அமைச்சராக அவர் இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் அவர் பார்வையிட்டார். […]













