இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் 61 பிரதேசங்கள் டெங்கு அபாய வலையங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமீபகாலமாக டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி டெங்கு நோய் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளது. 2023 இன் இதுவரையான காலப்பகுதியில், 48,963 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)