இலங்கையில் மற்றுமொரு கோர விபத்து – பலர் காயம்
தெமோதரை நீர் வழங்கல் சபைக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்றுகவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் பேருந்து முற்றாக தலைகீழாக கவிழ்ந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













