உலகம்

ஒரு பேருந்தின் அளவுக்கு வளரக்கூடிய இராட்சத ஜெல்லி மீன் கண்டுப்பிடிப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

அர்ஜென்டினா கடற்கரையிலிருந்து அரிய மற்றும் இராட்சத ஜெல்லி மீன் ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 820 அடி ஆழத்தில் இனங்காணப்பட்ட இந்த மீனினம் ஒரு பேருந்தின் அளவுக்கு வளரக்கூடியது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பெயர் ஸ்டைகியோமெடுசா ஜிகாண்டியா (Stygiomedusa gigantea) என அறிவிக்கப்பட்டுள்ளது. 30 அடிக்கு மேல் நீளமுள்ள அதன் நீண்ட கைகள், இரையை இலகுவாக பிடிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை குறித்த கடற்பகுதியில் புழுக்கள், பவளப்பாறைகள், கடல் அர்ச்சின்கள், கடல் நத்தைகள் மற்றும் அனிமோன்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

NPP அரசாங்கத்தை இயக்கும் தனி ஒருவன்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் NPP தனி நபர் ஆதிக்கம் இல்லை. உரிய வகையில் கலந்துரையாடி கூட்டு பொறுப்புடனேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா Tilvin silva தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பெலவத்தையில் (ஜே.வி.பி. JVP தலைமையகம்) நீங்கள் இயக்குவதாகக் கூறப்படுகின்றது. நீங்கள்தான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி என்ற விமர்சனமும் எதிரணியால் முன்வைக்கப்படுகின்றதே…” என டில்வின் சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “நான் உத்தியோகப்பூர்வமற்ற […]

ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் போர் : முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் இன்று!!

  • February 5, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடனான நான்கு ஆண்டுகால மோதலில் சுமார் 55,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  (Volodymyr Zelensky) கூறியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவர கிரெம்ளின் “சரியான முடிவுகளை எடுக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் இன்று அபுதாபியில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையே  கியேவ் தேவையான தேர்வுகளை எடுக்கும் வரை ரஷ்ய துருப்புக்கள் தங்கள் தாக்குதல்களை தொடரும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. […]

இந்தியா

மலேசியா பறக்கிறார் பிரதமர் மோடி!

  • February 5, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Narendra Modi இரு நாட்கள் அரசமுறை பயணமாக நாளை மறுதினம் (06) மலேசியா Malaysia செல்கின்றார். இதன்போது முக்கியத்துவமிக்க சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இந்தியா-மலேசியா அமைப்பின் 10-வது கூட்டத்தையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் , பிரதமர் மோடி பேச்சு நடத்துவார். இதன்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதான் செலுத்தப்படவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படலாம் […]

இந்தியா தமிழ்நாடு

அனல் கக்கும் தேர்தல் களம்: 21 ஆம் திகதி வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்!

  • February 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் திருநங்கை ஒருவரை வேட்பாளராகவும் நிறுத்த நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களம் களமிறங்கவுள்ளார் எனவும் தெரியவருகின்றது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் […]

இந்தியா

மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு!

  • February 5, 2026
  • 0 Comments

மணிப்பூரில் Manipur குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் Yumnam Khemchand பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். குகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். மேலும், பா.ஜ.க-வின் கோவிந்தாஸ் கொந்தவுஜம், என்.பி.பி கட்சியின் கே. லோகன் சிங் […]

உலகம்

திருமணத்திற்குப் புறம்பான உறவில் பில்கேட்ஸ் : எப்ஸ்டீன் கோப்பில் வெளியான தகவல்!

  • February 5, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக  செல்வந்தரான பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்துள்ளார். அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டுள்ள  மின்னஞ்சல்களில், , கேட்ஸ் திருமணத்திற்குப் புறம்பான உடலுறவில் ஈடுபட்டதாகவும், “ரஷ்யப் பெண்களிடமிருந்து” பாலியல் ரீதியாக பரவும் தொற்று ஏற்பட்டதாகவும் எப்ஸ்டீன் குற்றம் சாட்டியதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக மறுத்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பில்கேட்ஸ், அவமானப்படுத்தப்பட்ட நிதியாளருடன் நேரத்தைச் செலவிட்டதற்காக தன்னை […]

இலங்கை செய்தி

புதுடெல்லி பறந்தார் ஜே.வி.பி. செயலாளர்!

  • February 5, 2026
  • 0 Comments

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா tilvin silva தலைமையிலான குழுவினர் இன்று (05) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பேரிலேயே அவர்கள் புதுடெல்லி நோக்கி பயணமானார்கள். இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்று, முதலமைச்சர்கள் உள்ளிட்டோரும் சந்திப்பு நடத்தவுள்னர். இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களுக்கு கண்காணிப்பு பயணமும் மேற்கொள்ளவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், இளங்குமரன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஐரோப்பா

இரு ஐரோப்பிய நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை : சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு!!

  • February 5, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும்  போர்ச்சுகலுக்கு சீரற்ற வானிலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் அரையாண்டு பயணத்திற்கு தயாராகி வருவதால் வானிலைகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்றைய தினம் ஸ்பெயினின் மலாக்கா மாகாணம் முழுவதும் கடுமையான மழைப் பொழிவு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 12 மணி நேரத்திற்குள் சதுர மீட்டருக்கு 150 லிட்டரைத் தாண்டி மழை பெய்யக்கூடும் என்றும், […]

பொழுதுபோக்கு

தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்து கௌரவித்த பார்த்திபன்!

  • February 5, 2026
  • 0 Comments

தூய்மை பணியாளருக்கு பாதணி அணிவித்து பாத பூஜை செய்து கௌரவப்படுத்தியுள்ளார் நடிகர் பார்த்திபன் Parthiban. குப்பையில் கிடந்த 45 பவுண் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த அவரின் செயலை பாராட்டியே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா, குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் சேர்ப்பித்துள்ளார். அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.” […]