மட்டக்களப்பில் கடற்றொழிலாளர்களால் போராட்டம்
மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். வாகரை பிரதேசத்தில் உள்ள கடற்றொழிலாளர் அமைப்புகள் இணைந்து இன்று (05) இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் பெருமளவானோர் மட்டக்களப்பு ,கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவிக்கரை வீதியால் சென்று கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட காலமாக கரை வலை மீன்பிடியில் […]













