வட அமெரிக்கா

ஐரோப்பாவுக்கு பயணம் செய்யவுள்ள கனடியர்களுக்கான விசேட அறிவுறுத்தல்

  • July 31, 2023
  • 0 Comments

ஐரோப்பா பயணம் செய்யும் கனடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்கள் விசேட அனுமதி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வீசா இன்றி கனடியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும்.எனினும் அடுத்த ஆண்டிலிருந்து இந்த நடைமுறையில் சிறு மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் கனடியர்கள் அனுமதி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த அனுமதிக்காக 7 […]

இந்தியா

தெலுங்கானாவில் கள்ளக்காதல் மீதுள்ள மோகத்தால் தாய் செய்த செயல்…!

  • July 31, 2023
  • 0 Comments

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது 4 வயது மகளை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் தெலங்கானா ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்யாணி(22). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார்.இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. பின்பு 2019 ஆம் ஆண்டு தன்விதா என்ற பெண்குழந்தை பிறந்தது. தற்போது, அந்த குழந்தைக்கு 4 வயது ஆகிறது.இந்த தம்பதியினருக்கு […]

இலங்கை

கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் வாகனம் தீப்பிடிப்பு

இன்று கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக நேரில் பார்த்த ஒருவர் பகிர்ந்துள்ள காணொளி காட்சிகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் காயங்களோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மற்றும் கொழும்பு தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதை வீடியோ காட்சிகள் காட்டுகிறது. தீ அணைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து மீண்டும் வீதிக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் தொடர்பில் எகிப்து அழுத்தம்

  • July 31, 2023
  • 0 Comments

உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தொடர்புடைய ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது அத்தியாவசியமானது என்பதுடன் ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கும் அவசர தீர்வு எனவும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி குறிப்பிட்டுள்ளார்.ஆனால் மேற்கத்திய நாடுகள் தங்களது வாக்குறுதியை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ள புடின், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாக தானியங்களை வழங்க ஊறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். கருங்கடல் பாதையூடாக தானியங்களை வாங்கும் […]

இலங்கை

வவுனியாவில் சிறைகைதிகளுக்கு சின்னம்மை நோய் பரவல்!

  • July 31, 2023
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன்,  கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான செயற்ப்பாடும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நோய்பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையினால் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசீ ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் விளக்கமறியலில் உள்ள கைதிகளின் நீதிமன்ற தவணைகளுக்கு புதிய திகதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன்,  சில வழக்குகள் நிகழ்நிலை […]

அறிந்திருக்க வேண்டியவை இலங்கை

மண்டைதீவு வைத்தியசாலையில் இலவச மருத்துவ முகாம்…

  • July 31, 2023
  • 0 Comments

யாழ். மண்டைதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் அனுசரனையில் இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்த இலவச மருத்துவ முகாம், ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்டைதீவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த மருத்துவமுகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை செய்ய விரும்பியவர்கள் 12 மணித்தியாலங்கள் நீர் மற்றும் உணவு என்பவற்றை எடுத்துக்கொள்ளாமல் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலவச நீரிழிவு பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலை […]

பொழுதுபோக்கு

“விஜயுடன் அந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு” தமன்னா அந்தர் பல்டி….

  • July 31, 2023
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழியில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். விஜய்யின் 50வது படமாக உருவான சுறா படம் படுதோல்வியை சந்தித்தது. விஜயின் ‘சுறா’ படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு. அந்தப் படம் நிச்சயம் தோல்வியை தரும் என எனக்கு தோன்றியது. ஆனால் வேறு வழி இல்லாமல் […]

ஆசியா ஐரோப்பா

68வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சாகசப்பிரியர்..!

  • July 31, 2023
  • 0 Comments

68வது மாடியில் இருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான ரெமி லுசிடி என்னும் அவர் சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை அடைந்தபோது கதவைத் தட்டி அங்கிருந்த […]

வட அமெரிக்கா

காதலனுடன் இணைந்து பிள்ளைகளை கடத்திய கனடியதாய்..!

  • July 31, 2023
  • 0 Comments

கனடாவில் காதலனுடன் இணைந்து தனது இரண்டு பிள்ளைகளை கடத்தியதாக பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த பிள்ளைகளை காணவில்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆம்பர் எச்சரிக்கையும் நாடு தழுவிய ரீதியில் வெளியிடப்பட்டிருந்தது. எட்டு வயதான சிறுமி ஒருவரும் 10 வயதான சிறுவன் ஒருவனும் இந்த சம்பவத்தில் காணாமல் போயிருந்தனர்.நீண்ட தேடுதல்களின் பின்னர் இந்த இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். […]

இலங்கை

கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!

  • July 31, 2023
  • 0 Comments

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதியினால் நடத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேசிய அமைச்சர், கோழி இறைச்சி சந்தையில் விலை உயர்வால் மக்கள் படும் இன்னல்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை […]