வெளிநாட்டிலிருந்து உள்ளூர் சந்தைக்கு வெள்ளரி? தக்காளி, பீட்ரூட், கேரட், லீக் இறக்குமதிக்கும் அனுமதி
மரக்கறிகள் மற்றும் பழங்கள் இறக்குமதிக்கான தடை நீக்கப்படுவது இந்நாட்டு விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நுகர்வோருக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார். இலங்கையில் பயிரிடக்கூடிய வெள்ளரி, தக்காளி, பீட்ரூட், கேரட், லீக்ஸ், பீன்ஸ் போன்ற மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வாழைப்பழம், அன்னாசி, தர்பூசணி போன்ற பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது […]













