இலங்கை பொழுதுபோக்கு

இலங்கை வருகின்றார் சச்சின் டென்டுல்கர்

  • August 6, 2023
  • 0 Comments

முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் யுனிசெப் இன் தெற்காசியாவிற்கான  பிராந்திய தூதுவருமான சச்சின் டென்டுல்கர் எதிர்வரும் ஒகஸ்ட் 08 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட்டில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ளார். கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறுவர்களின் […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் 10 வயது குழந்தைகள் பாடசாலை செல்லத் தடை!

  • August 6, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பள்ளிக் கல்வியைத் தடை செய்ய தலிபான்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த தடை ஏற்கனவே நாட்டின் பல மாகாணங்களில் அமுலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாடசாலைகளிலோ அல்லது கல்வி நிலையங்களிலோ சேர்க்க வேண்டாம் என தலிபான்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களின் கல்வி உரிமை உட்பட பல உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், மேலும் […]

இலங்கை

மயிலவெ பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் மரணம்- மற்றுமொருவருக்கு காயம்!

  • August 6, 2023
  • 0 Comments

மயிலவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று (06) மாலை 3.00 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் பக்மீகம-அடம்பன பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.சந்ரதாஷ (41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை குறித்த நபருடன் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த கே.பியசாந்த பண்டா (37வயது) என்பவர் காயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச […]

ஐரோப்பா

சீனாவில் நிலநடுக்கம் – 21 பேர் படு காயம்

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பிங்யுவான் கவுண்டியில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதில் 21 பேர் காயமடைந்தனர்.என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:33 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, Dezhou மற்றும் Liaocheng நகரங்களைச் சேர்ந்த 21 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் விளைவாக 126 வீடுகள் இடிந்து […]

இந்தியா

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்யும் ஜோபைடன் !

இந்த ஆண்டு ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாக்குகின்றது. . இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7ஆம் திகதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்று மீண்டும் 10ம் திகதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். இந்தியப் பயணத்தின் போது பிரதமர் மோடியுடன் ஜோபைடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. இது […]

ஆசியா

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து : 15 பேர் பலி!

  • August 6, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே குறித்த விபத்து இன்று (6.08) இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் ராவல்பிண்டி நோக்கிச் சென்றதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

பறிபோகும் அரச பணியாளர்களின் வேலை!

  • August 6, 2023
  • 0 Comments

பாரிய அளவிலான அரச பணியாளர்களை சேவையில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மொனராகலை மாவட்ட செயலக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “சர்வதேச அளவில் வங்கி பரிவர்த்தனைகள் நின்றுவிட்டதை மறந்துவிடாதீர்கள். இப்படி ஒரு சர்வதேசப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை அனைவரும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும்  ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மிகக் குறைந்த […]

இலங்கை

விவசாயிகளின் பிரச்சினைக் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

  • August 6, 2023
  • 0 Comments

அரசியல் ரீதியாக பிரிந்திருந்தாலும், இயற்கை விடையத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிங்கிரிய பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது விவசாயிகளின் பிரச்சினை குறித்து கருத்து வெளியிட்ட அவர்,  விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் என்ன எனவும், தண்ணீர் பிரச்சினைக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வு குறித்தும் கேள்வி எழுப்பினார். அத்துடன்  இது குறித்து நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விவாதிப்போம் என நம்புகிறோம் எனவும் அவர் […]

இலங்கை

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது – அலிசப்ரி!

  • August 6, 2023
  • 0 Comments

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பொருத்தமற்றது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர் இருப்பார்கள் எனவும்,  அவர்கள் வெவ்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருப்பார்கள் எனவும் கூறினார். பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்குகின்ற போது அந்த முதலமைச்சர்களே பொலிஸாரை நிர்வாகம் செய்யும் நிலைமையே காணப்படும் எனத் தெரிவித்த அவர், தற்போது […]

பொழுதுபோக்கு

பொது மக்களுக்காக அடுத்த அதிரடி திட்டத்தை உருவாக்கினார் விஜய்…

  • August 6, 2023
  • 0 Comments

தளபதி விஜய் தற்போது தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் தனது அரசியல் பிரவேசத்திற்கான அடிக்கல் நாட்டுவதை நாம் அனைவரும் அறிவோம். விஜய் மக்கள் இயக்கத்தின் சமீபத்திய நடவடிக்கை வழக்கறிஞர்கள் குழுவை உருவாக்குவதாகும். இப்போது, விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்கள் குழு, சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் அறிவுறுத்தலின்படி, சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ, இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்துள்ளதாக விஜய் […]