இலங்கை

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது – அலிசப்ரி!

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பொருத்தமற்றது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர் இருப்பார்கள் எனவும்,  அவர்கள் வெவ்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருப்பார்கள் எனவும் கூறினார்.

பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்குகின்ற போது அந்த முதலமைச்சர்களே பொலிஸாரை நிர்வாகம் செய்யும் நிலைமையே காணப்படும் எனத் தெரிவித்த அவர், தற்போது தேசிய ரீதியில் ஒரு பொலிஸ் கட்டமைப்பே காணப்படுகின்றது எனவும், பொலிஸ் அதிகாரத்தை கையாளும்பொழுது நாட்டின் நிலை குறித்த கேள்வி எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக   பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதானது அச்சமான நிலையை ஏற்படுத்துகின்றது எனவும், அவர் விமர்சித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content