இந்தியா

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்யும் ஜோபைடன் !

இந்த ஆண்டு ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாக்குகின்றது. . இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7ஆம் திகதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்று மீண்டும் 10ம் திகதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

இந்தியப் பயணத்தின் போது பிரதமர் மோடியுடன் ஜோபைடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதிபர் ஜோபைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்குமாறு மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஜோபைதான் ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக ஜோபைடன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பிடன் முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே