வட அமெரிக்கா

அமெரிக்காவில் கடும் வெப்பத்தால் 147 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்

  • August 9, 2023
  • 0 Comments

அதிக வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பமான காலநிலை காரணமாக அமெரிக்காவில் 147 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், எதிர்பார்த்ததை விட அதிக வெப்பத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பத்தினால் அமெரிக்காவின் 03 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை அரிசோனா, நெவாடா மற்றும் டெக்சாஸ் மாநிலங்கள். அரிசோனா மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக 103 பேர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் மற்றுமொரு பாதிப்பு – கடும் நெருக்கடியில் சுகாதார பிரிவு

  • August 9, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நுளம்புகளினால் ஏற்படும் டெங்கு மற்றும் chikungunya நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் மத்திய-கிழக்கு மாவட்டமான Rhône இல் இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் இதுவரை அங்கு 13 பேருக்கு இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டிருந்ததாக Auvergne-Rhône-Alpes இற்கான பிராந்திய சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதேவேளை அங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் டெங்கு மற்றும் chikungunya நோய்த்தாக்கத்துக்கு உள்ளானவர்களிடம் இருந்து மற்றவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு […]

இலங்கை

இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்து – போக்குவரத்து பாதிப்பு

  • August 9, 2023
  • 0 Comments

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வில்வத்த ரயில் கடவையில் கொள்கலன் ஒன்று ரயிலுடன் இன்று காலை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கிரிஉல்ல – மீரிகம வீதி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக ரயிலுடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

இரகசியமாக AI அம்சத்தை உருவாக்கும் ஆப்பிள்? வெளியான இரகசியம்

  • August 9, 2023
  • 0 Comments

உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது செயற்கை நுண்ணறிவு சேவைகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒருபுறம் Open AI நிறுவனம் அசுர வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நாங்க மட்டும் சும்மாவா என எலான் மஸ்க் X-AI திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதில் கூகுள் நிறுவனமும் பார்ட் என்ற ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டில் இருக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அனைவரையும் தொடர்ந்து, புதிதாக ஆப்பிள் நிறுவனமும் தங்களின் ஏஐ சேவையை விரைவில் தொடங்க […]

ஆசியா

சிங்கப்பூர் வானில் தோன்றிய மர்ம கரும்புகை – குழப்பத்தில் மக்கள்

  • August 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் செந்தோசா தீவில் திடீரென தோன்றிய மர்ம கரும்புகை வளையம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அச்சம் கலந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வினோதமான காட்சி நேற்று ஆகஸ்ட் 7 அன்று “danenrdnslm5” என்ற TikTok பயனரால் பகிரப்பட்டது. வீடியோவைப் பகிர்ந்த நூருதீன் செலாமட், அவரும் அவரது நண்பர்களும் சென்டோசாவில் உள்ள தஞ்சோங் கடற்கரையில் சுற்றுலா சென்றபோது கரும்புகை வளையத்தைக் கண்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். முதலில் அது தேனீக் கூட்டமாக இருக்கலாம் என்று […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் வெப்பநிலை! புதிய உச்சம் தொட்ட ஜூலை மாதம்

  • August 9, 2023
  • 0 Comments

பூமியின் வெப்பநிலை, கடந்த மாதம் மிக அதிகமாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை ஆய்வகம் இதனை தெரிவித்துள்ளது. பல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காட்டுத்தீ ஆகியவற்றால், கடந்த மாதம் வெப்பநிலை, 2019ஆம் ஆண்டைவிட 0.33 பாகை செல்சியஸ் அதிகரித்தது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சராசரி வெப்பநிலை 16.63 டிகிரி செல்சியசாகப் பதிவானது. ஜூலையில் பதிவான வெப்பநிலை, முன்னெப்போதும் எட்டாத நிலையைத் தொடக்கூடும் என்று அறிவியலாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர். உலகப் பெருங்கடல்களிலும் மிக அதிகமான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவியாளராக பணியாற்றும் நபரின் அதிர்ச்சி செயல்

  • August 9, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சமூக உதவியாளராக பணியாற்றும் ஒருவர் குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டதன் காரணமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் டுயிஸ்பேர்க் மாவட்ட நீதிமன்றமானது சமூக உதவியாளராக பணியாற்றிய ஒருவருக்கு 2 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதது டுயிஸ்பேர்க் மாவட்ட நீதிமன்றமானது இன்டர்கிருசியுர் எல்பர் என்று சொல்லப்படுகின்ற சமுதாயத்தில் சில உதவிகளை புரியும் அமைப்பினுடைய உதவியாளருக்கே இவ்வாறு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நபரானவர் 492 குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளார் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை முழுவதும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

  • August 9, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீர் வழங்கல் சபை இது தொடர்பில் தீர்மானித்துள்ளது. அதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட அட்டவணையின்படி நீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று குறித்த சபை தெரிவிக்கின்றது. சில பகுதிகளில் நீர் பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது. போதிய நீர் இல்லாததால் நீர் வழங்கல் சபையால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் குழந்தைகளை ஊக்கப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்

  • August 8, 2023
  • 0 Comments

கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு கருத்து வெளியிட்டார். அங்கு பேசிய டெண்டுல்கர், கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் நின்றுவிடக் கூடாது. கிரிக்கெட் தனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகவும், ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக கவனத்துடன் பணிபுரியத் தொடங்கியதாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்டு வாழவும் தொடங்கினேன் என்றார். வாழ்க்கையில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் இருப்பதாகவும், வாழ்க்கையின் கொண்டாட்டங்களையும் ஏமாற்றங்களையும் சமமாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் குழந்தைகளை ஊக்கப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்

  • August 8, 2023
  • 0 Comments

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித் டெண்டுல்கர் UNICEF அமைப்பின் தொடர் நிகழ்ச்சிகளுக்காக நேற்று இலங்கை வந்திருந்தார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு கருத்து வெளியிட்டார். அங்கு பேசிய டெண்டுல்கர், கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் நின்றுவிடக் கூடாது. கிரிக்கெட் தனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகவும், ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக கவனத்துடன் பணிபுரியத் தொடங்கியதாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்டு […]