பூமியின் வெப்பநிலை! புதிய உச்சம் தொட்ட ஜூலை மாதம்

பூமியின் வெப்பநிலை, கடந்த மாதம் மிக அதிகமாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை ஆய்வகம் இதனை தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காட்டுத்தீ ஆகியவற்றால், கடந்த மாதம் வெப்பநிலை, 2019ஆம் ஆண்டைவிட 0.33 பாகை செல்சியஸ் அதிகரித்தது.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சராசரி வெப்பநிலை 16.63 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
ஜூலையில் பதிவான வெப்பநிலை, முன்னெப்போதும் எட்டாத நிலையைத் தொடக்கூடும் என்று அறிவியலாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர்.
உலகப் பெருங்கடல்களிலும் மிக அதிகமான வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.
புவியின் பருவநிலை, கடல்வாழ் உயிரினங்கள், கடலோரச் சமூகங்கள் ஆகியவற்றின் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)