ஹொரவ்பொத்தானையில் துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!
ஹொரவ்பொத்தான -வாஹல்கட பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை-மாவட்டத்தில் ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் எல்லையை தாண்டி T-56 துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தான -01ம் கட்டை பகுதியைச் சேர்ந்த யோதகே சுனில்சாந்த (58) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது- […]













