இலங்கை

பெண்களிடம் வைத்தியர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

  • August 17, 2023
  • 0 Comments

35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள சுவனாரி கிளினிக்குகளுக்குச் சென்று பரிசோதனை செய்யுத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் பத்மக டி சில்வா மேற்படி கேட்டுக்கொண்டுள்ளார். ‘பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களான கர்ப்பப்பை வாய் […]

ஆசியா

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல்! 100க்கும் மேற்பட்டோர் கைது

பாகிஸ்தானில் தேவாலயங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தேவாலயங்களை எரித்ததையும், வீடுகளை சேதப்படுத்தியதையும் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜரன்வாலாவில் இரண்டு கிறிஸ்தவ ஆண்கள் குரானில் இருந்து பக்கங்களை கிழித்ததாகக் கூறப்பட்டதால் வன்முறை வெடித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க சால்வேஷன் ஆர்மி தேவாலயம் கலவரத்தில் எரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் தெரிவிக்கப்படுகினறது. ஜரன்வாலாவை உள்ளடக்கிய பைசலாபாத் மாவட்டத்தில் ஏழு நாட்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கும் […]

மத்திய கிழக்கு வட அமெரிக்கா

வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி!

  • August 17, 2023
  • 0 Comments

சவுதி அரேபியாவில் சொந்த தந்தையை கொடூரமாக தாக்கி, கொலை செய்து உடலை துண்டாக வெட்டிய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த நபர் அமெரிக்க குடிமகன் எனவும், அந்த தந்தை எகிப்தியர் எனவும் கூறப்படுகிறது. புதன்கிழமை தலைநகர் ரியாதில் வைத்து பிஷாய் ஷெரீப் நஜி நசீப் என்ற அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றே தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவின் உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் தனது எகிப்திய தந்தையை அடித்து துன்புறுத்தி கழுத்தை […]

இலங்கை

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • August 17, 2023
  • 0 Comments

தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்கள் மற்றும் 52 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி  54 979 குடும்பங்களைச் சேர்ந்த 183 038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மாத்திரம் 75 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்களில் 70 238 பேர் […]

பொழுதுபோக்கு

கேம் சேஞ்சருடன் பிரம்மாண்ட இயக்குனர் பிறந்தநாள் கொண்டாட்டம்

  • August 17, 2023
  • 0 Comments

இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை ‘கேம் சேஞ்சர்’ குழுவினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடப்படுபவர் இயக்குனர் ஷங்கர். புதிய தொழில்நுட்பங்களை தனது படங்களில் புகுத்தி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார். எப்போதும் தனது படங்களில் பிரம்மாண்ட காட்சிகளை கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஷங்கர், தனது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர்!

சந்திரயான் -3 நிலவை நெருங்கிய நிலையில் ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் சந்திர பயணத்தின் இந்த குறிப்பிடத்தக்க சாதனை ஆகஸ்ட் 17 வியாழன் அன்று மதியம் 1 மணிக்கு நடந்தது இனி இவை இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கும். விக்ரம் லேண்டர் தொடர்ந்து படிப்படியாக நெருக்க உள்ளது. லேண்டர் பாதை குறைப்பு பணிகள் நாளை மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பிறகு லேண்டர் நிலவில் எங்கு தரையிறங்குவது என்று முடிவு […]

உலகம்

ஆர்ஜென்டீனாவில் நெடுஞ்சாலையில் தீபிடித்து எரிந்த பேருந்து!

  • August 17, 2023
  • 0 Comments

ஆர்ஜென்டீனாவில் நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. எனினும், அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் விரைவாக தப்பிச் சென்று உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

இலங்கை

மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு வலியுறுத்தல்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழ் அமைப்புக்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளன. தென்னிலங்கை சிங்கள மக்கள் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக பல கருத்துக்களை வெளியிட்டு வருவதால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் தமிழ் மக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர்களின் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விகாரைகள்மீது கைவைத்தால் வடக்கு கிழக்கில் […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய தியாகி அறக்கொடை நிதியம்

  • August 17, 2023
  • 0 Comments

கடந்த 11.08.2023ம் திகதி அனுராதபுரம் -மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.அப்பிரதேச வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர். 8, 12 வயதுடைய ஆண், 14 வயதுடைய பெண் பிள்ளையின் தந்தை தர்மசிரி ரணதுங்க ( 43), 22 வயதுடைய பெண் பிள்ளை, 14, 07 வயதுடைய ஆண் பிள்ளைகளின் தந்தை எஸ்.மஹிந்த குமார ( 45), 14 […]

ஆப்பிரிக்கா

லிபியாவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • August 17, 2023
  • 0 Comments

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.08) முதல் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கிடையில் இந்த மோதல் நிலைமை உருவாகியது. எவ்வாறாயினும், இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.