திருமலையில் சாரதியின் தூக்க கலக்கத்தினால் ஏற்பட்ட விபத்து- ஒருவர் படுகாயம்!
திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்து இன்று (20)அதிகாலை இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக மோதியதில் லொறி முற்றாக சேதமடைந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட லொறியின் சாரதி இன்று (20) அதிகாலை உமி ஏற்றி கொண்டு புத்தளம் நோக்கி செல்லவிருந்த நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. […]













