ஐரோப்பா

ஜெர்மனியில் காணாமல் போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஜெர்மனியில் காணாமல் போன பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள சீன் என்ற பிரதேசத்தில் 23 வயதுடைய ஒரு பெண்ணானவர் திடீரென மாயமாகியுள்ளார்.

குறித்த பெண்ணின் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் 15ஆம் திகதி ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தின் மற்றுமொரு நகரமான எமெரிக்ஸ் என்ற பிரதேசத்தில் உள்ள அதிவேக போக்குவரத்து பாதையை அண்டிய வயல் வெளி ஒன்றில் இறந்த நிலையில் குறித்த பெண்ணின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த பெண் இறந்த நிலையில் இவரது உடல் எமெரிக்ஸ் பிரதேசத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விசாரணையை அடுத்து தற்பொழுது 23 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் மேலதிக உதவிகளை வழங்குமாறு பொலிஸார் வேண்டுதலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்