இலங்கை

இஸ்ரேலில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கட்டுநாயக்கா கொண்டுவரப்பட்டது!

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் மரணமடைந்த  அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது. சடலத்தை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (28.10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பராமரித்து வந்த திருமதி அனுலா […]

செய்தி

நடைப்பயிற்சி மேற்கொள்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • October 28, 2023
  • 0 Comments

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். நடைப்பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் ஆகும். தினசரி நடைப்பயிற்சி மேற்கோளாவது நல்லது. குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. நடைப்பயிற்சி செய்பவர்கள் காலையிலேயே பூங்காக்களிலோ அல்லது வீட்டு முற்றத்திலோ என தங்களுக்கு விருப்பமான இடத்திலோ நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். நடைப்பயிற்சியின் நன்மைகள் உடல் எடை அதிகரிப்பு உடல் […]

இலங்கை முக்கிய செய்திகள்

ஹமாஸின் முக்கிய தலைவர் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் காசா வடக்கு பகுதியில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலை அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தரைவழி தாக்குதலையும் மெல்ல மெல்ல விரிவு படுத்தி வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தூங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசா பகுதியில் பயங்கரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் […]

பொழுதுபோக்கு

அழகு தேவதையாய் அர்ஜூன் மகள்… திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது

  • October 28, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும், ஆக்ஷனாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இந்நிலையில், இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஐஸ்வர்யா படங்களில் நடத்துள்ளார். இவர், விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் பிரேம பரஹா, தமிழில் சொல்லவிடவா ஆகிய படங்களில் நடித்தார். […]

இலங்கை

இலங்கையில் சோகம் – நண்பியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி மரணம்

  • October 28, 2023
  • 0 Comments

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி ஒருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார். ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி என்ற 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார். திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் Apple Watch இறக்குமதிகளுக்குத் தடை?

  • October 28, 2023
  • 0 Comments

Apple நிறுவனத்தின் Apple Watch கைக்கடிகாரங்களின் இறக்குமதியைத் தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அனைத்துலக வர்த்தக ஆணையத்தால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கைக்கடிகாரத்தில் தனக்குச் சொந்தமான ரத்த உயிர்வாயு அளவைக் கண்டறியும் ஒளித் தொழில்நுட்பம் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக Masimo Corp மருத்துவ நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்தத் தொழில்நுட்பத்திற்கு Masimo காப்புரிமை பெற்றிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் தடுக்கவில்லை என்றால் ஆணையத்தின் பரிந்துரை 60 நாள்களில் நடப்புக்கு வரும் என்று Masimo கூறியது. Apple நிறுவனத்தின் அத்துமீறல் […]

இலங்கை

கொழும்பில் இன்றும் தீ விபத்து – எரிந்து நாசமாகிய பொருட்கள்

  • October 28, 2023
  • 0 Comments

பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று (28) காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இந்த நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு

மத்திய கிழக்கில் நீடித்த போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

  • October 28, 2023
  • 0 Comments

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத […]

விளையாட்டு

உலககோப்பை இந்திய அணிகளின் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய தோனி!

  • October 28, 2023
  • 0 Comments

2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இம்முறை சொந்த மண்ணில் நடைபெறுவதால், இந்தியாவுக்கு சற்று சாதகமாக உள்ளது. அந்தவகையில் ரோஹித் சர்மா தலையிலான இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அணியில் ரோஹித், கோலி, கில், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மோட்டோரோலா அறிமுகம் செய்த அபூர்வ கையடக்க தொலைபேசி

  • October 28, 2023
  • 0 Comments

மோட்டோரோலா சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள போனை நீங்கள் கையில் வளைத்து வாட்ச் போல கட்டிக் கொள்ளலாம். தற்போது மடிக்கக் கூடிய ஸ்மார்ட் ஃபோன்களின் அறிமுகம் மெல்ல மெல்ல வேகமெடுத்து வரும் நிலையில், மோட்டோரோலா நிறுவனம் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் போன் அந்த நிறுவனத்தின் கம்பேக்காக இருக்கும் எனக் கூறலாம். சமீபத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான லெனோவோ டெக் வோர்ல்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது […]