ஐரோப்பா

விட்டிலிகோ நோயை குணப்படுத்த புதிய க்ரீம் அறிமுகம்!

  • February 24, 2026
  • 0 Comments

விட்டிலிகோ நோயை குணப்படுத்த முதல் முறையாக க்ரீம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை Ruxolitinib (Opzelura என விற்கப்படுகிறது) என்ற க்ரீமை அங்கீகரித்துள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ்  (National Institute for Health and Care Excellence) விட்டிலிகோவின் தாக்கம் உள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த க்ரீமை பரிந்துரைக்கிறது. குறிப்பாக பிற மேற்பூச்சு சிகிச்சைகள் தோல்வியடைந்தால் இந்த க்ரீம் பரிந்துரைக்கப்படுகிறது. விட்டிலிகோ என்பது […]

இலங்கை செய்தி

தபாலில் அனுப்பிவைக்கப்பட்ட 04 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

  • February 24, 2026
  • 0 Comments

400,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் ஒரு இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படவுள்ளதாக அதன் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். வேரஹெர, அனுராதபுரம், மாத்தறை மாவட்ட அலுவலகங்களிலும் தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான சுமார் 8 இலட்சம் அட்டைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்கும் […]

விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு

  • February 24, 2026
  • 0 Comments

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 45 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான்  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சாஹிப்சாதா […]

ஐரோப்பா

ஜெர்மனியில் முடங்கும் போக்குவரத்து சேவை!

  • February 24, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். வரும் 27 ஆம் திகதி முதல் 48 மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 100,000 தொழிலாளர்களின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் வெர்டி தொழிற்சங்கம், வருடாந்திர பேச்சுவார்த்தைகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் மீது அழுத்தத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

இலங்கை செய்தி

லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய எழுவர் கொண்ட நிபுணர் குழு நியமனம்

  • February 24, 2026
  • 0 Comments

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. 01.பேராசிரியர் டபிள்யூ.டி.ஏ.எஸ். ரொட்ரிகோ (தலைவர்) – மின் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் 02.கலாநிதி என்.ஏ.ஐ.டி. நிஸ்ஸங்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் 03.கலாநிதி ஐ.யூ. அத்தநாயக்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் […]

இலங்கை செய்தி

முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்தவுக்கு விளக்கமறியல்

  • February 24, 2026
  • 0 Comments

வெலிகம W15 ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜகத் நிஷாந்த எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெலிகம W15 ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜகத் நிஷாந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பியபோதே கைது செய்யப்பட்டுள்ளார். 2023 […]

இலங்கை செய்தி

தென்மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு நியமனம்!

  • February 24, 2026
  • 0 Comments

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, 2026 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி […]

இலங்கை

நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு

  • February 24, 2026
  • 0 Comments

நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 05 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்காக அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை […]

விளையாட்டு

இந்தியாவின் அரையிறுதி கனவு கலையும் சாத்தியம்!

  • February 24, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடர்பில் சூப்பர் 8 சுற்றில் தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி Indian team அரையிறுதி சுற்றுக்கு semi finals முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரையிறுதிக்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில் சிம்பாப்வே Zimbabwe அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அமோக வெற்றியை பெற வேண்டும். இந்திய அணிஇ சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு […]

உலகம்

வெனிசுலாவில் கைதிகள் விடுதலை விவகாரம் : முன்னுக்குப்பின் முரணாக வரும் தகவல்கள்!

  • February 24, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 540 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சட்ட உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃபோரோ பெனல் (  Foro Penal)  தெரிவித்துள்ளது. பிப்ரவரி 20 அன்று பொது மன்னிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் 91 பேர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புதிய பொது மன்னிப்புச் சட்டம் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 2,200 பேர் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. அரசாங்க தரப்பில் இருந்து வெளிவரும் கருத்துக்கள் மற்றும் […]