ஐரோப்பா

ஜெர்மனியில் முடங்கும் போக்குவரத்து சேவை!

ஜெர்மனியில் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வரும் 27 ஆம் திகதி முதல் 48 மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 100,000 தொழிலாளர்களின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் வெர்டி தொழிற்சங்கம், வருடாந்திர பேச்சுவார்த்தைகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் மீது அழுத்தத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மேற்படி தொழில்துறை நடவடிக்கை மில்லியன் கணக்கான பயணிகளை பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் ரயில்வே மற்றும் விமான சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்