உலகம்

இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் : நெதன்யாகு கடும் கண்டனம்

“ஒரு நகரத்தையும், அதன் மக்களையும் முழுமையாக அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறேன்” என்று துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் காசாவில் கொடூரமான தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் சர்வதேச நீதிமன்றில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். எர்டோகனின் பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சில சக்திகள் இருக்கின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் […]

பொழுதுபோக்கு

பொங்கல் ரேஸ்.. பெரும் தலைகளுடன் மோதப்போகும் விஜய் சேதுபதி… ஜெயிக்கப்போவது யார்?

  • November 16, 2023
  • 0 Comments

2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் சேதுபதி நடித்திருக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் ரிலீஸாகவிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்த விஜய் சேதுபதி நட்புகளுக்காக சில படங்களில் நடித்தார், தயாரிக்கவும் செய்தார். அதனால் அவருக்கு பொருளாதார ரீதியாக கொஞ்சம் அடி விழுந்ததாகவும் அப்போது பேச்சு எழுந்தது. அதனையடுத்து அவர் நடித்த படங்கள் கொஞ்சம் சறுக்க செய்தன. இருப்பினும் அவருக்கென்று ரசிகர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லன் ரோலையும் செய்தார். தொடர்ந்து […]

இலங்கை

இலங்கையில் காங்கிரீட் தூண் இடிந்து விழுந்து மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை!

  • November 16, 2023
  • 0 Comments

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிராந்திய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

தமிழக கடற்தொழிலாளர்கள் 22 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை ஐந்து வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 22 கடற்தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது , 22 கடற்தொழிலாளர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு […]

ஆசியா

சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து : 26 பேர் பலி!

  • November 16, 2023
  • 0 Comments

வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. அத்துடன்  டஜன் கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 6:50 மணியளவில்  ஷாங்க்சி மாகாணத்தின் லூலியாங் நகரில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு முதல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட டேவிட் கேமரூன்

புதிய வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் உக்ரைனுக்கு தனது முதல் பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரித்தானியாவின் “தார்மீக ஆதரவு, இராஜதந்திரம் , பொருளாதார, எல்லாவற்றிற்கும் மேலாக, இராணுவ ஆதரவு” தொடரும் என்று அவர் உறுதியளித்துள்ளார். . இந்நிலையில் பிரித்தானியாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு கேமரூனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்சி நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரேனிய ஜனாதிபதி கேமரூனின் புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் அவரது புதிய பதவியில் கியேவுக்கு தனது முதல் பணி விஜயத்தை மேற்கொண்டதற்கு நன்றி […]

இலங்கை

ஒட்டிசுட்டானில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளுடன் மூவர் கைது

முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமன்றி கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (15.11.2023) இரவு 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி லொறி ஒன்றில் மாடுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் முத்தையன்கட்டு பகுதியில் இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒட்டிசுட்டான் பொலிசார் சோதனைகளை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதி இல்லாமல் மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது. சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவரும் […]

இலங்கை

அரச வங்கிகளின் 20 வீத பங்குகளை விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் திட்டம்!

  • November 16, 2023
  • 0 Comments

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கிகளின் 20% பங்குகளை விற்பனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வங்கிகளில் 20% பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் அது தேசிய குற்றமாகும் எனவும் இதன் மூலம் வங்கிகள் முழுமையாக விற்பனை செய்யப்படலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு முன்னரும் இவ்வாறான முறையில் வங்கிப் பங்குகளை விற்பனை செய்ய முயற்சிகள் […]

இலங்கை

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது – மகிந்த!

  • November 16, 2023
  • 0 Comments

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு தாம் உட்பட 7 பேர் பொறுப்பேற்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அது தொடர்பில் பொறுப்புக்கூறும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதனைச் செய்யத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் பிரார்த்தனை செய்ய வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், இந்த நாட்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய இரு மாணவர்கள் கடத்தப்பட்டதாக தகவல்!

  • November 16, 2023
  • 0 Comments

களுத்துறை, ஹென்டியங்கல பிரதேசத்தில் பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் இருவர்  நேற்று (15.11) கடத்தப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் மாணவியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றிச் சென்றதாகவும், அதனைக் கண்ட நண்பர் ஒருவர் காப்பாற்றி மாணவியை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகவும், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அறிந்த அதிபர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, களுத்துறை தெற்கு பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அங்கு இரு மாணவர்களும் களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு […]