இலங்கை

ஒட்டிசுட்டானில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளுடன் மூவர் கைது

முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமன்றி கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (15.11.2023) இரவு 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி லொறி ஒன்றில் மாடுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் முத்தையன்கட்டு பகுதியில் இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒட்டிசுட்டான் பொலிசார் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதி இல்லாமல் மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது.

சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவரும் புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு மாடுகளும், கன்று ஒன்றுமாக மூன்று மாடுகள் இறந்த நிலையிலும் , இரண்டு மாடுகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும் ஏனைய இரண்டு மாடும் ஒரு கன்றுமாக மொத்தமாக 8 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவற்றை கடத்தி செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி வாகனம் ஒன்றையும் ஒட்டிசுட்டான் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரி.சுபேசன் தலைமையில் பொலிஸ் கொஸ்தாபல்களான (103114) சதுரங்க, (98305) வீரசிங்க ஆகிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் வாகனத்தை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (16.11.2023) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் இம்மாதம் 28 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கவும், இறந்த மாடுகளை புதைப்பதற்கும், ஏனைய மாடு, கன்றினை ஒட்டுசுட்டான் விவசாய திணைக்களத்திற்கு கொடுக்குமாறும் நீதவானால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content