மனிதச்சங்கிலி போராட்டத்தின் அர்த்தத்தினை சில அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தி விட்டார்கள்: பொ.ஐங்கரநேசன்
அகிம்சை ரீதியான போராட்டங்களில் மிகவும் வலுவான போராட்டமான மனிதச்சங்கிலி போராட்டத்தின் அர்த்தத்தினை சில அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தி விட்டார்கள் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது. அதற்கு பின்னர் நாம் இனி […]













