அறிந்திருக்க வேண்டியவை

பால்வெளி அண்டத்தில் 5 லட்சம் சூரியன்கள் – நாசா வெளியிட்ட தகவல்

  • November 23, 2023
  • 0 Comments

நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள பால்வெளி அண்டத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதில் விஞ்ஞானிகளே எதிர்பார்க்காத பல உண்மைகள் தெரிய வந்துள்ளது. நமக்கு தெரியாத பல ரகசியங்கள் விண்வெளியில் ஒளிந்துள்ளது. அவை அனைத்துமே நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் விண்வெளியில் மனிதர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் ஒரு சதவீதம் கூட இருக்காது. தோண்டத் தோண்ட வெளிவரும் பொக்கிஷம்போல, விண்வெளி ஆய்வு என்பது ஒரு முடிவில்லாத கயிறு தான். நாம் […]

செய்தி

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • November 23, 2023
  • 0 Comments

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் ஒரு மணியின் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பில் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் கூறியுள்ளது. மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடை​யே, அத்தனகளு ஓயாவின் […]

விளையாட்டு

முதல் டி20 போட்டி – இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை.!

  • November 23, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரானது கடந்த 19ம் திகதியுடன் முடிந்தது. அத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 6 வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, நவம்பர் 23ம் […]

செய்தி

ஹமாஸ் அழிக்கப்படும் – முடிவில் மாற்றமில்லை – இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு அறிவிப்பு

  • November 23, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை நேற்று முன்தினம் எட்டப்பட்து. இந்த நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படாததால் நேற்று காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த கத்தார் அரசு, அது எப்போது அமலுக்கு வரும் என்பது 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தற்காலிகமானது எனவும், காஸாவிலிருந்து ஹமாஸை முழுமையாக அழிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் மேப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • November 23, 2023
  • 0 Comments

இடங்களை தத்ரூபமாக காட்டவும், எளிதில் அடையாளம் காணவும் கூகுள் மேப் வண்ணங்களில் மாற்றத்தை செய்திருக்கிறது. பயணங்கள் இன்றி வாழ்க்கை இல்லை. ஆனால் தற்போதைய நவீன காலத்தில் கூகுள் மேப் இல்லாத பயணங்களே இல்லை என்ற அளவிற்கு ஒவ்வொரு பயணத்திலும் கூகுள் மேப் இன்றியமையாத தேவையாக மாறி இருக்கிறது. ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கக்கூடிய அனைவருமே தற்போது கூகுள் மேப்பை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வாகன ஓட்டிகளுடைய உற்ற நண்பனாக இருப்பது கூகுள் மேப்கள் தான். முன்பெல்லாம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து அடுத்தடுத்து வெளியேற்றப்படும் வெளிநாட்டவர்கள்

  • November 23, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து 15 வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை தெரிவித்துள்ளார். 24 தொடக்கம் 51 வயது வரையுள்ள 15 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அச்சுறுத்தலாக அமைவார்கள் என தெரிவிக்கப்பட்டு நாடு கடத்தப்படுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கொண்டு நடமாடுவது, கொள்ளையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் 20 பேர் நாட்டை விட்டு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் உணவு பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • November 23, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பணவீக்க விகிதம் கணிசமான சரிவைக் கண்டதாக ஜெர்மன் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எரிசக்தி விலைகள் நிலையாகி வருகின்றன, ஆனால் உணவுப் பொருட்களின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு விலை உயர்வைக் காண்கிறது. மதிப்பிடப்பட்ட அக்டோபர் புள்ளிவிவரங்கள் ஜெர்மனியில் பணவீக்க விகிதம் அதன் நிலையான மாதாந்திர சரிவைத் தொடர்கிறது என்று தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, விகிதம் 4.5 சதவீதமாக இருந்தபோது, ​​ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது […]

ஆசியா

சிங்கப்பூருக்குள் நுழைந்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி

  • November 23, 2023
  • 0 Comments

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்னர். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.58 மணியளவில், தானா மேரா கோஸ்டல் சாலையின் கரையை நோக்கி வேகமாகச் செல்லும் படகு ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் அவர்களை வெற்றிகரமாக மடக்கி பிடித்து கைது செய்ததாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் இருவரிடமும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட 5 மீட்டர் நீளமுள்ள படகையும், சாட்சியமாக போலீசார் […]

இலங்கை

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நாடு!

  • November 23, 2023
  • 0 Comments

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பான் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானின் தாதியர் பராமரிப்பு துறையின் வேலை வாய்ப்புகள் குறித்து அறிவித்துள்ளது. ஜப்பானின் குறிப்பிட்ட திறன் பணியாளர் திட்டத்தின் (SSW) கீழ் மேற்படி துறையில் ஆண் மற்றும் பெண் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய சான்றிதழ்கள், ஆவணங்களை நவம்பர் 30, 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் sswrp@slbfe.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க-கனடா எல்லையில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு

  • November 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம் உள்ளது. ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் நான்கு எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். இந்நிலையில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் ‘பயங்கரவாத தாக்குதல்’ முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் FBI விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள […]