இலங்கை

இலங்கையில் பாடசாலைகளில் மேலதி வகுப்புகளை நடத்த தடை!

  • November 22, 2023
  • 0 Comments

ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் இன்று புதன்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன. ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களால் நடத்தப்படும் கட்டணம் அறவிடப்படும் மேலதிக வகுப்புக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை தடை உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உலகம்

டச்சு புதிய பிரதம மந்திரியை தெரிவு செய்வதறகான தேர்தல் தீவிரம்

13 ஆண்டுகளில் நாட்டின் முதல் புதிய பிரதம மந்திரியை தெரிவு செய்வதறகான தேர்தலில் டச்சு வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நான்கு கட்சிகள் பாராளுமன்றத்தில் மிகப்பெரியதாக சக்தியாக முன்னணியில் உள்ளன. 13 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தேர்தல்களில் வாக்களிப்பார்கள், . மத்திய-வலது தலைவர் டிலான் யெசில்கோஸ் வெற்றி பெற்று முதல் பெண் டச்சு பிரதம மந்திரி ஆவதற்கு முனைந்துள்ளார்.

இலங்கை

கல்முனையில் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

  • November 22, 2023
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெண்னொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (21.11)  பெண்னொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்வதற்கு வருகைதந்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த பெண்ணிடம் பாலியம் இலஞ்சம் கோரியுள்ளார். இதனை தொடர்ந்து இது தொடர்பில் குறித்த பெண்ணால் இலஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் கல்முனை […]

இலங்கை

மட்டக்களப்பில் துயிலும் இல்லங்களில் விளக்கேற்ற வருமாறு மக்களுக்கு அழைப்பு!

  • November 22, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் துயிலும் இல்லங்களில் இம்முறை மாவீரர் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதனால் அச்சமின்றி அனைவரும் கலந்துகொண்டு இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்தவர்களை நினைவுகூருமாறு மட்டக்களப்பு மாவட்ட  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது பட்டிப்பளை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் புஸ்பலிங்கம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், […]

பொழுதுபோக்கு

1984இல் பேரழிவை ஏற்படுத்திய விஷ வாயு பேரழிவு… “தி ரயில்வே மேன்”

  • November 22, 2023
  • 0 Comments

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள தி ரயில்வே மேன் என்ற வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஷிவ் ராவைல் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில், மாதவன், கே கே மேனன், திவ்யேந்து, பாபில் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1984ல் போபாலில் நடைபெற்ற விஷ வாயு பேரழிவை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள தி ரயில்வே மேன் வெப் சீரிஸ். இந்தி உட்பட பல மொழிகளில் உருவாகியுள்ள தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்ஸின் தமிழ் விமர்சனம் […]

இலங்கை

மின்சார வேலியில் சிக்குண்ட கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது சுமார் 15 வயது மதிக்கத்தக்க யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. யானையின் உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பொலிஸாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளார்கள் மின்சார வேலையினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு […]

இலங்கை

SLC யினால் ICCக்கு அனுப்பப்பட்ட மூன்று கடிதங்களை பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதி

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அவற்றைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் இருப்பதாகக் குற்றம் சுமத்தி இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்துமாறு கோரி நவம்பர் 6, 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் ஐசிசிக்கு […]

இலங்கை

‘இது விபச்சார விடுதி அல்ல’; எதிர்க்கட்சி MP ஏரான் ​விக்ரமரட்ன

  • November 22, 2023
  • 0 Comments

பாராளுமன்ற பொதுமக்கள் கலரிக்கு வருகைதரும் பாடசாலை மாணவர்களை, கலரிகளில் இருந்து வெளியேற்ற வேண்டாமென சபாநாயகரிடம் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் ​விக்ரமரட்ன, மாணவர்களிடமிருந்து பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்றார். இதேவேளை, சபைக்குள் நடைபெறும் விடயங்களை கையடக்கதொலைபேசிகளில் பதிவு செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வது நகைச்சுவையானது. ஏனெனில், பாராளுமன்றம் விபச்சார விடுதி அல்ல என்றார்.

தமிழ்நாடு

‘அவர் விளையாட்டாக சொல்லி இருப்பார்’; மன்சூர் அலிக்கானுக்கு சீமான் ஆதரவு

  • November 22, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் விளையாட்டாக சொல்லியிருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சீமானிடன், மன்சூர் அலிகான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் என்னுடைய கட்சியில் நின்று போட்டியிட்டுள்ளார்.அவர் த்ரிஷா குறித்து வேண்டுமென்றே சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. அவர், நகைச்சுவையாக, விளையாட்டாக சொல்லியிருக்கலாம். அவர், ஒரு உணர்வுமிக்க தமிழர். […]

மத்திய கிழக்கு

காங்கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பலி!

  • November 22, 2023
  • 0 Comments

காங்கோ-பிரஸ்ஸாவில்லில் உள்ள மைதானத்தில் இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் பிரஸ்ஸாவில்லில் உள்ள மைதானத்தின் வாயில்கள் வழியாக சிலர் வலுக்கட்டாயமாக செல்ல முயன்றதால், நெரிசல் ஏற்பட்டது என்று குடியிருப்பாளர்கள் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட சுமார் 1,500 பேரை பணியில் சேர்ப்பதற்கான திட்டத்தை இராணுவம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.