இலங்கை

யாழில் மோசமாக வீடியோக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ்ப்பானம் இந்து கல்லூரி அருகிலுள்ள நீராவியடி பகுதியில் இரவு நேரங்களில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் கமரா மூலம் வீடியோக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

குறித்த நபருக்கு எதிராக சில பெண்கள் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதற்கமையவே குறித்த சந்தேக நபரை கண்காணிப்பு கமரா உதவியுடன் கைது செய்த யாழ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த நபரை யாழ்ப்பான பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவில் பாரபடுத்தினர்.

இதன்படி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.-

 

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content