மதுபோதையில் பொலிஸார், பொதுமக்கள் மீது தாக்குதல்… சென்னையில் அமெரிக்க இளைஞர்கள் அட்டகாசம்
சென்னையில் காவலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் மதுபோதையில் நடுரோட்டில் அமெரிக்க இளைஞர்கள் துரத்தி துரத்தி தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு இரண்டு அமெரிக்க இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறி இருவரும் ஓட்டலில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டல் நிர்வாகம் இரண்டு இளைஞர்களையும் பவுன்சர்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் வந்த […]













