உலகம்

மொன்டானாவில் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பற்றி எரிந்த வீடு – பலர் உயிரிழப்பு

மொன்டானாவின் பில்லிங்ஸில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் உட்பட அனைவரையும் சட்ட அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளதாக யெல்லோஸ்டோன்  Yellowstone  கவுண்டியின் இடைக்கால ஷெரிப் கென்ட் ஓ’டொனெல் Kent O’Donnell  குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் பெயர்கள், வயதுகள் அல்லது பிற அடையாள விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

குடும்ப சண்டையின் காரணமாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான  காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை.

மேலும் விசாரணை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்