இலங்கை

இரட்டை சிசுக்களின் தாய் மரணம் விவகாரம்;குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

  • December 2, 2023
  • 0 Comments

இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால் , நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா ( 25) என்ற இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.அது தொடர்பில் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,கடந்த 21ஆம் திகதி குழந்தை பேறுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலம் இரண்டு குழந்தைகளை […]

ஐரோப்பா

இத்தாலியில் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ள பழமையான கோபுரம்!

  • December 2, 2023
  • 0 Comments

இத்தாலியின் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரமான கரிசெண்டா கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக நீடித்து நிலைத்து நிற்கும் குறித்த கோபுரமானது அதிகமான பார்வையாளர்களையும் கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக அதன் சரிவு தன்மைக்காகவே உலக புகழ்பெற்ற அதிசயங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் அதன் சரிவு காரணமாகவே அது இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து குறித்த கோபுரத்தை சுற்றி பாதுகாப்பு […]

ஐரோப்பா

உக்ரைனில் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்கள் கலந்துகொள்ள அனுமதி: விளையாட்டு அமைச்சகம்

பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ள மைதானங்களில் ரசிகர்கள் கலந்துகொள்ளவும் விளையாட்டுகளைப் பார்க்கவும் அனுமதிக்கும் அமைப்பை உருவாக்கி வருவதாக உக்ரைனின் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விளையாட்டு நிகழ்வுகளை அணுகக்கூடியதாகவும் முடிந்தவரை பாதுகாப்பாகவும் நாடாத்த அரசாங்கம் விளையாட்டு அமைச்சகம், உள் விவகார அமைச்சகம், பாதுகாப்பு முகவர் மற்றும் பிராந்திய இராணுவ நிர்வாகங்களை பணித்துள்ளது என்று தி கிவ் இண்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது . ஸ்டேடியங்களில் நடைபெறும் விளையாட்டுகளில் பார்வையாளர்கள் எப்போது கலந்துகொள்ள முடியும் என்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இறுதியில் திரும்புவது மைதானங்கள் […]

உலகம்

உலகளாவிய காலநிலை நிதியத்திற்கு 03 பில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா!

  • December 2, 2023
  • 0 Comments

உலகளாவிய காலநிலை நிதியத்திற்கு அமெரிக்கா 3 பில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. துபாயில் நடைபெறும் காலநிலை உச்சமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,  “இந்த நெருக்கடியை உலகம் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் மற்றும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை இன்று நாங்கள் செயல்பாட்டின் மூலம் நிரூபிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலையில் டக்ளஸ் கரிசனை

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்று(01.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர். இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறினார். இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து […]

இலங்கை

யாழ் – கல்லுண்டாய் பகுதி விபத்து தொடர்பில் வெளியான தகவல்!

  • December 2, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் நடைபெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்திகள் என தெரியவந்துள்ளது. “யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில்,  குறித்த செய்தி தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் , யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்ட போது , அவ்வாறான விபத்து சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என […]

உலகம்

12 பேருடன் காணாமல் போன சரக்கு கப்பல்: தேடும் பணியை நிறுத்திய கிரீஸ்

கடந்த வார இறுதியில் ஏஜியன் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் காணாமல் போன 12 மாலுமிகளைத் தேடும் பணியை முடிவுக்குக் கொண்டு வருவதாக கிரீஸின் கடலோர காவல்படை அறிவித்துள்ளது. ஐந்து சரக்கு கப்பல்கள், மூன்று கடலோர காவல்படை கப்பல்கள், விமானப்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு கடற்படை போர் கப்பல் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டன. கப்பலில் 11 எகிப்தியர்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் ஒரு இந்தியர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 14 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு உப்பு […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

  • December 2, 2023
  • 0 Comments

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் இரண்டாவது முறையாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், காஸாவில் மீண்டும் ராணுவ தாக்குதலை நேற்று காலை முதல் தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் படையினர் போர்நிறுத்தத்தை மீறி விட்டதாகவும், போர் நிறுத்தத்தை மதிக்காமல் 2 ராக்கெட் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் பிடியிலிருந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் தன்வசம் சிறையில் இருந்த பாலஸ்தீனர்களைப் பதிலுக்கு விடுதலை செய்துள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் […]

இலங்கை

வவுனியா – செட்டிக்குளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞன் கைது!

  • December 2, 2023
  • 0 Comments

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 30ஆம் திகதி கணவனும் மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட் […]

இலங்கை

திருமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் 6ம் இடம் – ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டு

  • December 2, 2023
  • 0 Comments

திருகோணமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்சனா கோணேஸ் க.பொ.த சாதரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் 6 ஆம் இடத்தையும் தமிழ் மொழி மூலமாக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவியை நேரில் அழைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கல்வி நடவடிக்கையில் அக்கறை செலுத்திய அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு […]