இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலையில் டக்ளஸ் கரிசனை

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்று(01.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர்.

இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறினார்.

இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தார்.

கடந்த 27 ஆம் திகதி சில அரசியல் தரப்புக்களினால் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொடிகாம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சென்ற அப்பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content