ஹோண்டுராஸில் பேருந்து விபத்து : 11 பேர் உயிரிழப்பு!
ஹோண்டுராஸில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில், ஏறக்குறைய 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகரில் இருந்து 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று (05.12) குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 40 பேர் பயணித்த நிலையில், 11 பேர் உயிரிழந்தாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மீட்பு தொடர்வதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து இது தொடர்பில் […]













