இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி.இத்தவெலவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 01 ஜனவரி 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் சேத்திய குணசேகர மற்றும் கே.பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா

பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது – அதிபர் புதின்

  • December 28, 2023
  • 0 Comments

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார் மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த ஆண்டு ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் ஒரு கொவிட் மரணம் பதிவு!

  • December 28, 2023
  • 0 Comments

இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் -19 தொற்றுடன் நிமோனியாக காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், உயிரிழந்ததை அடுத்து  பிரேத பரிசோதனை இடம்பெற்ற நிலையில் மேற்படி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. யக்கல பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின்போது, அவர் கோவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி […]

வட அமெரிக்கா

கிறிஸ்மஸ் தினத்துக்கு பொருள் வாங்க சென்று மாயமான இளம் காதல் ஜோடிகள் சடலமாக மீட்பு!

  • December 28, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரில் பொருட்கள் வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சவானா நிக்கோல் சோடோ எனும் 18 வயதுடைய பெண்ணும் இசைக்கலைஞரான 22 வயதுடைய மேத்யூ குரேரா எனும் ஆணும் காதலித்து வந்த நிலையில் தனி வீடொன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார். அதன்பின்பு இருவரும் வீடு திரும்பவில்லை. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான […]

பொழுதுபோக்கு

வேட்டையனில் ரஜினிகாந்த் மற்றும் பகத் பாசில்… லீக்கானது புகைப்படம்

  • December 28, 2023
  • 0 Comments

ஜெயிலர் எனும் மாபெரும் வெற்றிக்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் போன்ற சிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இயக்குனர் TJ ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாள் அன்று கிலிம்ப்ஸ் வீடியோ கூட வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், […]

உலகம்

கொலம்பியாவில் நிறுவப்பட்டது உலகப் புகழ்பெற்ற பாடகி ஷகிராவின் வெண்கல சிலை!

  • December 28, 2023
  • 0 Comments

உலகப் புகழ்பெற்ற பாடகி ஷகிராவின் வெண்கல சிலை ஒன்று கொலம்பியாவில் உள்ள பாரன்குவிலாவில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீ உயரமுள்ள குறித்த வெண்கல சிலையானது, அவருடைய நடன தோற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பி யினோ மார்க்வெஸ் மற்றும் அவரது மாணவர்களால் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா

மத்திய இந்தியாவில் பேருந்து ஒன்று டிரக் ஒன்றுடன் மோதி விபத்து : 13 பேர் உயிரிழப்பு!

  • December 28, 2023
  • 0 Comments

மத்திய இந்தியாவில் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் சாரதியுடன் சேர்த்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் தீக்காயம் அல்லது எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி அனூப் பார்கவா தெரிவித்தார். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் பழைய வாகனங்கள் போன்ற காரணங்களால், […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் 14000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு!

  • December 28, 2023
  • 0 Comments

ஸ்காட்லாந்தில் உள்ள பல வீடுகளுக்கு மின்துண்டிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கெரிட் புயல் காரணமாக ஏறக்குறைய 14 ஆயிரம் வீடுகளுக்கு மின் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், Scottish and Southern Electricity Networks வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளைய (29.12) தினம் மேலும் சில வீடுகளுக்கு மின் துண்டிப்பு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்சாரம் திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்று பிபிசி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அனேகமாக வெள்ளிக்கிழமை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 18 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!

  • December 28, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  பிரிஸ்டல் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. கெரிட் புயல் தாக்கத்தின் காரணமாக ஹீத்ரோவிலிருந்து பல விமானங்கள் இன்று (28.12)  ரத்து செய்யப்பட்டன. அதேநேரம் பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன. காற்றானது 80 மைல் வேகத்தில் வீசிய நிலையில், ரயில், விமானம் மற்றும் படகு சேவைகளும் தாமதத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு லண்டனில் உள்ள […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் Sheffield இல் வன்முறை சம்பவம் பதிவு : ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

  • December 28, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின், ஷெஃபீல்டில் நடந்த வன்முறையின் போது மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியதில் 46 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொலைச் சந்தேகத்தின் பேரில் 23 வயதுடைய நபரும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 55 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு யோர்க்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். “வன்முறை மற்றும் சீர்குலைவு பற்றிய புகாரைத் தொடர்ந்து” நகரின் பர்ன்கிரேவ் பகுதியில் உள்ள கல்லூரிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், குழுவொன்றின்மீது […]