ஐரோப்பா

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஜப்பானை எச்சரித்த ரஷ்யா

  • December 28, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கியதற்காக ஜப்பானை ரஷ்யா எச்சரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு ரஷ்யா ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பிய பின்னர், ஜப்பானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜப்பான் வழங்கியதை ரஷ்யா விரோத செயலாக கருதுகிறது. இதன் காரணமாக ஜப்பான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

  • December 28, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. கோபுரத்தின் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. தற்போதைய நிர்வாகம் சரியல்ல என்று ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஈபிள் கோபுரத்தைக் கட்டிய பொறியாளர் குஸ்தாவ் ஈபிளின் நூற்றாண்டு கொண்டாடப்படும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 74 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலாத்தலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

செய்தி

ஆஸ்திரேலியாவில் உணவு இல்லாதவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

  • December 28, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் உணவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிக்கைகளின்படி, 3.7 மில்லியனுக்கும் அதிகமான குடும்ப அலகுகள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன. அந்த குடும்பங்களில் 77 சதவீதத்தினர் கடந்த ஆண்டில் முதல் முறையாக உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என்பது சிறப்பு. தற்போதைய வாழ்க்கைச் செலவு காரணமாக உதவிக்கான அழைப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. மக்கள்தொகையில் 48 சதவீதம் பேர் ஏற்கனவே ஊட்டச்சத்து குறைவாக உள்ளனர், மேலும் 23 சதவீதம் பேர் கடுமையான […]

தமிழ்நாடு

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்

  • December 28, 2023
  • 0 Comments

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 71ஆகும். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்இ விஜயகாந்தின் உடல் அவரது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் வாட்ச் விற்பனைக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்!

  • December 28, 2023
  • 0 Comments

காப்புரிமை செய்யப்பட்ட மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்சில் பயன்படுத்தியதால் விற்பனைக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு. உலகின் முன்னணி தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பில் கடந்த செப்டம்பர் மாதம் அதிநவீன வசதிகளை கொண்ட ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச் ரகங்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் வாட்ச்களை இயக்க தொடுதுறைகளை தொட வேண்டிய அவசியம் இல்லை. விரல்களை இரண்டு […]

வட அமெரிக்கா

வறுமையின் பிடியில் மத்திய அமெரிக்க நாடுகள் – அமெரிக்கா சென்று தஞ்சமடைய நடந்தே செல்லும் மக்கள்

  • December 28, 2023
  • 0 Comments

மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று தஞ்சமடைய மக்கள் நடந்தே செல்வதாக தெரியவந்துள்ளது. வறுமையில் சிக்கி தவிக்கும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக முயற்சித்துள்ளனர். அதற்காக அவர்கள் நடந்தே மெக்சிகோ வந்தடைந்தனர். குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரம் தேடி அமெரிக்கா செல்வதாகவும், தினமும் 30 கிலோமீட்டர் தொலைவு நடந்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவுக்கு புலம்பெயர தினமும் சுமார் 8000 பேர் மெக்சிகோ வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க எல்லையை அடைவதற்கு முன் […]

ஆசியா

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தல் – மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்

  • December 28, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் அன்றாடம் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 350ஆக இருந்த அந்த எண்ணிக்கை, இந்த வாரம் 560ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சு தகவல்களை வெளியிட்டது. மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில், பெரும்பாலோர் 60 வயதை எட்டியவர்கள். கடந்த 10ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை, சுமார் 1000 பேர் COVID-19 தொற்றுக்காக மருந்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 32 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் வாராந்திர அடிப்படையில் 4 […]

விளையாட்டு

சாதனை படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!

  • December 28, 2023
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். வார்னர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த காலகட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். இதன் மூலம் வார்னர் ஸ்டீவ் வாக் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது […]

செய்தி

ஜெர்மனியில் இளம் பெற்றோரின் அதிர்ச்சி செயல் – குழந்தைக்கு நேர்ந்த கதி

  • December 28, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் பச்சிளங்குழந்தையை பெற்றோரே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள பீலஃவோட் என்று சொல்லப்படுகின்ற நகரத்தில் 19 வயதுடைய பெண்ணும் 22 வயதுடைய ஒரு ஆணும் தங்களுக்கு பிறந்த குழந்தையை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த கொலை குற்றத்துக்காக இவ்இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பொலிஸார் இந்த குற்றம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்திய அகதிகள் – பலர் தப்பியோட்டம்

  • December 28, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அகதிகள் தடுப்பு மையத்தில் இருந்து 11 அகதிகள் தப்பி ஓடியுள்ளனர். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தடுப்பு மையத்தில் தங்கியிருந்த அகதிகள் ஜன்னல் ஒன்றை உடைத்து அதன்வழியாக தப்பிச் சென்றுள்ளனர். மொத்தமாக 11 அகதிகள் தப்பிச் சென்றதாக காலை 9 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் S கண்காணிப்பு பட்டியலில் உள்ள ஆபத்தான அகதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தடுப்பு முகாமில் […]