சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்!
சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்க்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் பெரும் வீழ்ச்சி கண்டது. இது நோய்த்தொற்று அதிகமாக இருப்பினும் தற்போதைய நோய் அலை குறைந்து வருவதைக் காட்டுவதாக கூறப்படுகிறது. “கொவிட்-19 நோய்த்தொற்று அலை குறைந்து வருகிறது என்று நம்பிக்கை கொள்ளலாம்,” என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் டேல் ஃபிஷர் கருத்துரைத்தார். டிசம்பர் 24லிருந்து 30ஆம் தேதிவரை […]













