இலங்கை

கொழும்பு புறநகர் பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை – மர்ம புகையால் அச்சம்

  • January 8, 2024
  • 0 Comments

ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து ஒரு வகையான புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக குறித்த புகையில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர். சூரிய ஒளி சரியாக இருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும் எனவும், அதுவரை புகை மூட்டமாக காணப்படுவதால் முகமூடிகளை முறையாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பெற்றோர்களுக்கு வெளியான அறிவிப்பு – குழந்தைகளுக்கு நிதி உதவி

  • January 8, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சுகவீனமான குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதி உதவி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்த இந்த நிதி உதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கமானது கிண்ட கிராண்ட் கில்ட்டில் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகள் சுகயீனம் ஏற்பட்ட பொழுது பெற்றோர்கள் அவர்களை பராமரிப்பதற்காக பெறப்படுகின்ற பணத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இதுவரை காலமும் கிண்ட கிராண்ட் கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த பணமானது 15 நாட்களுக்கு பெற முடியும். இந்நிலையில் […]

பொழுதுபோக்கு

ரஜினியுடன் கபில்தேவ் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

  • January 8, 2024
  • 0 Comments

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், கபில்தேவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினி மொய்தீன்பாய் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். பொங்கலுக்கு திரைக்கு வருவதாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Team Lal Salaam wishes the legendary @therealkapildev a Happy birthday! 🥳✨ Your journey, marked by triumphs and leadership, is an […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை அரசியல்வாதிகள் பின்னால் சுற்றி திரியும் அரச புலனாய்வு அதிகாரிகள்

  • January 8, 2024
  • 0 Comments

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைகிறார்களா என்பதை ஆராய்வதற்காக அரச புலனாய்வு அதிகாரிகள் இந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைவதற்கு எடுத்த தீர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. அவர்களில் யார் இணைகிறார்கள் என்பது குறித்து ஆராய்வதற்காக அவ்வப்போது புலனாய்வு அதிகாரிகள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. […]

பொழுதுபோக்கு

தினமும் புதுப் புது சர்ப்ரைஸ்களை அள்ளி வீசும் வெங்கட் பிரபு…

  • January 8, 2024
  • 0 Comments

நடிகர் விஜய்யின் 68ஆவது படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் முடிவடைந்துவிடும் என்று வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார் அதற்காக வெங்கட் பிரபு தற்போது இலங்கை சென்றுள்ளார். ஜனவரி இரண்டாம் வராத்தில் விஜய் இலங்கை செல்வார் என்றும் கூறப்படுகின்றது. https://twitter.com/VP_0ffl/status/1743995006363607146 இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானதை அடுத்து, […]

வாழ்வியல்

அளவிற்கு அதிகமானால்… விஷமாகும் தண்ணீர்

  • January 8, 2024
  • 0 Comments

உடலை ஆரோக்கியமாகவும், உள்ளேயும் வெளியேயும் வலுவாகவும் வைத்துக் கொள்ள, சரியான அளவு தண்ணீர் குடிப்பதும், நீரேற்றத்துடன் இருப்பதும் அவசியம். அதனால்தான், கோடை காலத்தில் மட்டுமல்லாது, மழை மற்றும் குளிர் காலங்களிலும் நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அளவிற்கு அதிக தண்ணீர் குடிப்பதால் நீங்கள் நோய்வாய்ப்படக் கூடும். ஆம், அதிகமாக தண்ணீர் குடிப்பதால் வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் டாக்ஸிசிட்டி எனப்படும் நோயை உண்டாக்கும். ஒரு நபர் ஒரு குறுகிய காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கும் போது, […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட விபரீதம் – 8 பேர் கவலைக்கிடம்

  • January 8, 2024
  • 0 Comments

மெல்போர்ன் இசை நிகழ்ச்சி ஒன்றில் போதைப்பொருள் உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 7 பேர் சுயநினைவின்றி சுவாச ஆதரவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் அளவுக்கதிகமாக அல்லது விஷம் கலந்ததே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பா

உலகிலேயே அதிக மொழிகள் பேசும் மக்கள் கொண்ட பிரித்தானிய நகரம்

  • January 8, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுவாக பல மொழிகளின் பற்றாக்குறையால் அறியப்பட்டாலும், அது உலகின் மிகவும் பன்மொழி நகரமாக உள்ளதென புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. மான்செஸ்டரில் எந்த நேரத்திலும் 200 மொழிகள் வரை பேசப்படுவதாக பன்மொழி மான்செஸ்டர் திட்டத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நகரத்தின் மக்கள்தொகை சுமார் 553,000 ஆகும், இது நகரத்தை மிகவும் மொழியியல் ரீதியாக அடர்த்தியாக மாற்றுகிறது. இந்த ஆயவின் மூலம் நகரத்தின் வயது வந்தோரில் பாதி பேர் பன்மொழி பேசுபவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், 10 இளைஞர்களில் நான்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் பல்லாயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • January 8, 2024
  • 0 Comments

பிரான்ஸில் அண்மைக்காலமாக குழந்தைகள் அதிகம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. குறித்த குழந்தைகள் அவசரப் பிரிவிலேயே அனுமதிக்க படுவதாக சுகாதாரம் அமைச்சு அறிவித்துள்ளது. வேறுபாடுகள் இன்றி சுமார் 39 000 மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆண்டொன்றுக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரங்கள், புறநகரங்கள் எனும் வேறுபாடு இன்றி சுவாசக் காற்று எங்கும் மாசுபட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். சுமார் 11,000 மூன்று வயது குழந்தைகள் ஆஸ்துமாவுக்காகவும், 28,000 குழந்தைகள் மூச்சுக்குழாய் அழற்சிக்காகவும் அவசரமாக அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கை

இலங்கை அரசியலில் மீண்டும் சந்திரிக்கா

  • January 8, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, அவர் நாடு திரும்புவது அநேகமாக அடுத்த வாரம் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மறைந்த பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார். நினைவேந்தல் நிகழ்வின் பின்னர், ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் நிறைவேற்றுச் சபையும் கூடும் எனவும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்காவுக்கு நாடு திரும்பியதும் கட்சியில் […]