இலங்கை

மருத்துவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க இலங்கை அமைச்சரவை அனுமதி!

  • January 8, 2024
  • 0 Comments

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை அதிகரிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இதுவரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிஏடி கொடுப்பனவு ரூ.35,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக ஆசிரியர்களின் படிப்பு கொடுப்பனவை அதிகரிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 25 வீதத்தால் அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் படிப்பு கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அவர்களது சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.

இலங்கை

பங்களாதேஷ் பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

பங்களாதேஷில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனாவுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் மக்களுக்கு ஷேக் ஹசீனா வழங்கிய சேவையும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைமைத்துவமே இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவுமிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக தனது வாழ்த்துச் […]

ஆசியா

பாகிஸ்தானில் பொலிஸாரின் டிரக் மீது பயங்கரவாத தாக்குதல் : 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி!

  • January 8, 2024
  • 0 Comments

பொலிஸாரை ஏற்றிச் சென்ற டிரக் அருகிலான பயங்கரவாத தாக்குதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் நாடு முழுவதும் பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், தற்கொலை படை தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் பஜவுர் (Bajaur) மாவட்டத்தின் மெஹ்முந்த் பகுதியில், நடைபெறவிருந்த போலியோ நோய் தடுப்புக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமுக்கு சுமார் 25 பொலிஸாருடன் சென்ற டிரக் ஒன்றின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 5 […]

ஐரோப்பா

ஜேர்மனியில் பொலிஸார் மீது தாக்குதல் தொடுத்த புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட கதி!

  • January 8, 2024
  • 0 Comments

ஜேர்மனியில் பொலிசாரை தாக்கிய புலம்பெயர்ந்தோர் ஒருவர், பொலிசார் தாக்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஜேர்மனியின் Mülheim நகரில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில், புலம்பெயர்ந்தோர் ஒருவர், ஊழியர்களைத் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.பொலிசார் அங்கு விரைந்த நிலையில், கினியா நாட்டவரான அந்த 26 வயது இளைஞர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அவரைக் கட்டுப்படுத்தமுயன்ற பொலிசாருக்கும் அடியும், கடியும் விழுந்துள்ளது. பெண் பொலிசார் ஒருவரும் தாக்கப்பட, அவரை டேஸர் மூலம் கட்டுப்படுத்த முயன்றுள்ளார்கள் பொலிசார். அவரைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் […]

இலங்கை

இலங்கை : அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை!

  • January 8, 2024
  • 0 Comments

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இருந்து 5000 ரூபா ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.

ஆசியா

ஈரானில் பெண் ஒருவருக்கு 74 முறை சவுக்கடி வழங்கிய அதிகாரிகள்!!

  • January 8, 2024
  • 0 Comments

ஈரானில் பொது ஒழுக்கத்தை மீறியதற்காக அதிகாரிகள் பெண் ஒருவரை 74 முறை சவுக்கால் அடித்துள்ளதுடன், தலையை மறைக்காததற்காக அபராதமும் விதித்துள்ளனர். தண்டிக்கப்பட்ட Roya Heshmati என்பவர், தெஹ்ரானில் பரபரப்பான பொது இடங்களில் அவமானகரமான முறையில் நடந்து கொண்டுள்ளதுடன் அதை ஊக்குவித்துள்ளார் என்றும் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.அந்த பெண்ணுக்கு ஈரானிய சட்டத்தின் படியும், ஷரியா முறைப்படியும் பொது ஒழுக்கங்களை மீறியதற்காக அவருக்கு 74 தடவைகள் கசையடி தண்டனை விதிக்கப்பட்டது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானில் உள்ள அனைத்துப் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மால் ஒன்றில் வானத்தில் இருந்து இறங்கிய ஏலியன்!! பொலிஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

  • January 8, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்துள்ளதாக, வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது. அதாவது அமெரிக்க நாட்டில் உள்ள ப்ளோரிடா மாகாணம், மியாமி பகுதியில் மால் ஒன்று அமைந்துள்ளது. இந்த […]

ஐரோப்பா

உக்ரைன் மக்களை வீடற்றவர்களாக ஆக்கிவிட்டது ரஷ்யா : உக்ரைன் முதல் பெண்மணி

உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா , உக்ரைன் மீதான தாக்குதல்களின் மூலம் ரஷ்யா “மக்களை வீடற்றவர்களாக ஆக்கிவிட்டது” என்று கூறியுள்ளார். இது “ஆயுதங்களால் மட்டுமே மாற்றப்பட முடியும்” என்றும் அவர் கூறுயுள்ளார். கார்கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், சபோரிஜியா மற்றும் க்மெல்னிட்ஸ்கி பகுதிகளில் ரஷ்ய ஷெல் தாக்குதல் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியது. குழந்தைகள் உட்பட இறந்தவர்கள் மற்றும் காயமடைந்துள்ளனர், ”என்று அவர் X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

இலங்கை மின்கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • January 8, 2024
  • 0 Comments

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை தனது ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இவ்வாறான பிரேரணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், ஆனால் இன்று (08.01) வரை அவ்வாறான பிரேரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம்

பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்குவது போர்க்குற்றம்: போப் பிரான்சிஸ்

பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்குவது போர்க்குற்றம், ஏனெனில் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் காஸா நிகழ்வுகள் இதற்கு தெளிவான சான்று. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பாரிய மீறல்கள் போர்க்குற்றங்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது, அவற்றைச் சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது, அவற்றைத் தடுப்பதும் அவசியம். மனிதாபிமானச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் அமுல்படுத்துவதற்கும் சர்வதேச சமூகத்தின் தரப்பில் அதிக முயற்சி தேவைப்படுகிறது, இது போர்ச் சூழ்நிலைகளில் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே […]