ஐரோப்பா

எரிவாயு சேமிப்பில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் – குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பு

குளிர்காலத்திற்கு முன்பு எரிவாயுவை சேமிக்கும் நடவடிக்கைகளில் ஜேர்மனி பின்தங்கியுள்ளது.

“தற்போதைய வேகத்தில் சேமிப்பு நிரப்புதல் தொடர்ந்தால், நவம்பர் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்குள் ஜெர்மனி சட்டப்பூர்வ சேமிப்பு நிரப்புதல் தேவைகளைப் பூர்த்தி செய்யாது,” என்று எரிவாயு சேமிப்பு சங்கமான INES-இன் நிர்வாக இயக்குனர் செபாஸ்டியன் ஹெய்னர்மேன் Sebastian Heinermann, தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு ஜேர்மனியின் சேமிப்பு 69 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 25 ஆம் திகதி அதன் சேமிப்பு 51.5 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆனால் நவம்பர் மாத்திற்குள் ஜெர்மனி மொத்தமாக 70 சதவீதம் நிரப்புதல் அளவை அடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் சேமிப்பு அளவுகள் குறைவாக உள்ளன. நெதர்லாந்து இந்த ஆண்டு தனது இலக்கை அடையத் தவறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்